Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதியம் குடிங்க..
Weight Loss Drink In Tamil: உங்கள் அழகை கெடுக்கும் வகையில் தொப்பை உள்ளதா? இந்த தொப்பையையும், அதிகரித்திருக்கும் உடல் எடையையும் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் அதிகம் சிரமப்படாமல், எளிய வழியில் குறைக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கு முதலில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க வேண்டும்.
உடலினுள் அதிகரித்துள்ள கொழுப்புக்கள் ஒருவரது தோற்றத்தை மட்டும் பாதிப்பதில்லை, அந்த கொழுப்புக்களானது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே இப்படிப்பட்ட கெட்ட கொழுப்பை ஒரே இரவில் குறைத்துவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடல் எடையில் கணிசமான மாற்றத்தைக் காணலாம்.

அப்படிப்பட்ட ஒரு அற்புதமான உடல் எடையைக் குறைக்க உதவும் பானம் குறித்து ஊட்டச்சத்து நிபுணரான மன்பிரீத் கல்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தயாரித்த இந்த பானமானது வெந்தயம், சோம்பு, இஞ்சி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இப்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது, இது எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது குறித்து விரிவாக காண்போம்.
வெந்தயம் எப்படி கொழுப்பை எரிக்க உதவுகிறது?
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை வெளியீட்டை குறைக்கிறது மற்றும் இது உடலினுள் உள்ள கொழுப்பு திசுக்களில் இருந்து கொழுப்பை எரிக்க உதவுகிறது என்று நிபுணர் கூறினார். மேலும் வெந்தயமானது கொழுப்புக்களை குறைப்பது மட்டுமின்றி, அவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. எனவே இப்படிப்பட்ட வெந்தயத்தை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம் இரத்த சர்க்கரையும், கொலஸ்ட்ரால் அளவுகளையும் ஆரோக்கியமான அளவில் வைத்துக் கொள்ள உதவும்.
சோம்பு எப்படி உதவுகிறது?
சோம்பு உடலின் மெட்டபாலிசத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. அதுவும் இதில் உள்ள இயற்கை கலவைகள் பசியைக் கட்டுப்படுத்தவும், நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கவும் உதவுகிறது. மேலும் நிபுணரின் கூற்றுப்படி, சோம்பு கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்கவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொண்டு பசியைக் கட்டுப்படுத்தவும் உதவி புரிந்து, எடை இழப்புக்கு உதவுகிறது.
இஞ்சி எப்படி உதவுகிறது?
தினசரி சமையலில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் இஞ்சி. இந்த இஞ்சியில் தொப்பையைக் குறைக்கும் விளைவுகள் உள்ளன. மேலும் இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. இந்த இஞ்சியானது கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இன்சுலியை திறம்பட நிர்வகிக்கவும் உவுவதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இஞ்சியை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். அதுவும் வெதுவெதுப்பான நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு, அத்துடன் எலுமிச்சை மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிப்பதனால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வெந்தயம் சோம்பு நீரைக் குடிப்பதால் பெறும் பிற நன்மைகள்
ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்த இந்த பானமானது உடல் எடையைக் குறைக்க மட்டுமின்றி, வேறுபல நன்மைகளையும் உடலுக்கு வழங்கும். அந்த நன்மைகள் பின்வருமாறு:
* உடல் சுத்தமாகும்
* இரத்த அழுத்தம் சீராகும்
* வயிற்று உப்புசம் குறையும்
* ப்ரீ ராடிக்கல்களில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும்
* இன்சுலின் உணர்திறனை ஆதரிக்கும்
கூடுதலாக இந்த பானத்தில் பட்டை, கல் உப்பு போன்றவைகளும் உள்ளன. இந்த பட்டை இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் கல் உப்பு நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
வெந்தய, சோம்பு நீரை தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
* வெந்தய பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* சுக்கு பவுடர் - 2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
தயாரிக்கும் முறை:
* இந்த பானம் தயாரிப்பதற்கு ஜாரில் எலுமிச்சை சாற்றினைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கலந்தால், பானம் தயார்.
எப்போது குடிக்க வேண்டும்?
* இந்த பானத்தை தினமும் மதிய உணவுக்கு முன் குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம் என்று ஊட்டச்சத்து நிபுணரான மன்பிரீத் கல்ரா கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் உங்களின் தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க நினைத்தால், இந்த பானத்தை மட்டும் குடித்தால் போதாது. தினசரி உடற்பயிற்சியுடன், சமச்சீரான உணவு பழக்கத்தையும் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தால், தொப்பை குறையும், செரிமானம் மேம்படும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
