Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் பன்னீர் ரெசிபிக்கள்!!!
எப்படி உருளைக்கிழங்கிற்கு அடிமைகள் நிறைய பேர் உள்ளனரோ, அதேப் போல் பன்னீருக்கும் நிறைய மக்கள் அடிமையாக உள்ளனர். குறிப்பாக இந்தியாவில், இந்த உணவுப் பொருளை அதிகம் பயன்படுத்துவார்கள். பாலில் இருந்து செய்யப்படும் பன்னீரிலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. அத்தகைய பன்னீரை சமைத்தால், அது சாதத்தை விட, சப்பாத்திக்கு தான் சூப்பராக இருக்கும்.
அதிலும் இத்தகைய பன்னீர் ரெசிபியானது இரவு நேரத்தில் செய்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். ஏனெனில் இதனை ரசித்து ருசித்து பொறுமையாக சாப்பிட்டால், இதன் ருசியானது இன்னும் சூப்பராக இருக்கும். பொதுவாக பெரும்பாலானோருக்கு பன்னீரை வைத்து ஒரே மாதிரி தான் சமைக்கத் தெரியும். ஆகவே அப்படி ஒரே மாதிரியான பன்னீர் ரெசிபியை செய்யாமல், சற்று வித்தியாசமான பன்னீர் ரெசிபியை முயற்சித்தால், அது பன்னீரின் மீது இன்னும் ஆசையை அதிகரிக்கும்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, வித்தியாசமான சுவையுடைய ஒருசில பன்னீர் ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.
சாஹி பன்னீர்" title="சாஹி பன்னீர்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சாஹி பன்னீர்
தபா ஸ்டைல் உணவுகளில் சைவம் மற்றும் அசைவம் இரண்டுமே மிகவும் சூப்பராக இருக்கும். அந்த வகையில் தபா ஸ்டைலில் செய்யப்படும் சாஹி பன்னீரும் சூப்பராக இருக்கும். குறிப்பாக இது சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
பன்னீர் தக்காளி கிரேவி" title="பன்னீர் தக்காளி கிரேவி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பன்னீர் தக்காளி கிரேவி
பன்னீர் தக்காளி கிரேவி நாண், சப்பாத்தி போன்றவற்றிற்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இதன் செய்முறையும் மிகவும் எளிமையானது.
காஷ்மீரி மேத்தி சமன் ரெசிபி" title="காஷ்மீரி மேத்தி சமன் ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>காஷ்மீரி மேத்தி சமன் ரெசிபி
கீரை மற்றும் பன்னீர் வீட்டில் அதிகம் இருந்தால், அப்போது அதனை காஷ்மீரி ஸ்டைலில் ஒரு ரெசிபி செய்யலாம். இது சாதத்திற்கும் சிறந்ததாக இருக்கும்.
பட்டாணி பன்னீர் கிரேவி" title="பட்டாணி பன்னீர் கிரேவி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பட்டாணி பன்னீர் கிரேவி
நீரிழிவு நோயாளிகள் பன்னீரை பயமின்றி சாப்பிடலாம். அதிலும் அதனை பட்டாணியுடன் சேர்த்து, கிரேவி போன்று செய்து, சாப்பாத்திக்கு சாப்பிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும்.
பன்னீர் அட்ரகி" title="பன்னீர் அட்ரகி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பன்னீர் அட்ரகி
என்ன ரெசிபியின் பெயரே வித்தியாசமாக உள்ளதா? இதன் பெயருக்கு ஏற்ப, இந்த ரெசிபியின் சுவையும் வித்தியாசமானதாக இருக்கும். குறிப்பாக எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும்.
பன்னீர் சன்னா மசாலா" title="பன்னீர் சன்னா மசாலா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பன்னீர் சன்னா மசாலா
பொதுவாக சன்னா மசாலாவைத் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பன்னீர் சன்னா மசாலா செய்திருக்கமாட்டோம். இதன் சுவை கூட நன்றாகத் தான் இருக்கும். மேலும் பேச்சுலர்களும் முயற்சிக்கலாம்.
பன்னீர் கிரேவி" title="பன்னீர் கிரேவி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பன்னீர் கிரேவி
இந்த ரெசிபி இதன் பெயருக்கு ஏற்பவே மிகவும் எளிமையானதாக இருக்கும். அதே சமயம் வித்தியாசமானதாகவும் இருக்கும்.
பன்னீர் பட்டர் மசாலா" title="பன்னீர் பட்டர் மசாலா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பன்னீர் பட்டர் மசாலா
நிறைய பேருக்கு சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா தான் பிடிக்கும். ஏனெனில் இதன் சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும். மேலும் ஈஸியாக செய்யக்கூடியது.
தயிர் பன்னீர் ரெசிபி" title="தயிர் பன்னீர் ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>தயிர் பன்னீர் ரெசிபி
தயிர் சுவை பிடிக்கும் என்பவர்கள், பன்னீர் மற்றும் தயிரை சேர்த்து ஒரு சைடு டிஷ் செய்யலாம்.



Click it and Unblock the Notifications
