Latest Updates
-
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
நீரிழிவு நோயாளிகளுக்கான... பட்டாணி பன்னீர் கிரேவி
நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனமாக இருக்க வேண்டிய காரணத்தினால், அவர்கள் பல நேரங்களில் சுவையில்லாத உணவுகளையே அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால் அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான சைடு டிஷ் ரெசிபி உள்ளது. அது தான் பட்டாணி பன்னீர் கிரேவி. இதில் உள்ள பன்னீர் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப்பொருளாக இருப்பதால், இதனை பட்டாணியுடன் சேர்த்து கிரேவி போன்று செய்து சாப்பிடலாம்.
இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு சூப்பரான ரெசிபி. இதன் சுவையும் அருமையாக இருக்கும். சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற, அந்த பட்டாணி பன்னீர் கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1 கப்
பன்னீர் - 100 கிராம் (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 2 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
தக்காளி - 4 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
கலவையானது நன்கு வதங்கியதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பட்டாணியானது நன்கு வெந்ததும், அதில் பன்னீரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி, நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்தால், சுவையான பட்டாணி பன்னீர் கிரேவி ரெடி!!! இதனை சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications