Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பன்னீர் கிரேவி
பொதுவாக பால் பொருட்களில் ஒன்றான பன்னீர் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த நிலையில் பன்னீரைக் கொண்டு, அருமையான சுவையில் ஒரு கிரேசி செய்ய நினைத்தால், அதற்கு இந்த வெள்ளை நிற பன்னீர் கிரேவி சரியானதாக இருக்கும்.
இந்த பன்னீர் கிரேவியை செய்வது மிகவும் எளிது. மேலும் இதனை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த பன்னீர் கிரேவியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
பால் - 6 டேபிள் ஸ்பூன்
க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு பால், தண்ணீர் மற்றும் க்ரீம் சேர்து நன்கு கொதிக்க விட்டு, பின் பன்னீர், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை, குறைந்தது 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சூப்பரான பன்னீர் கிரேவி ரெடி!!!
குறிப்பு:
வேண்டுமெனில் இந்த ரெசிபியில் க்ரீமிற்கு பதிலாக, 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை, வெங்காயத்துடன் சேர்த்து மென்மையாக அரைத்து செய்யலாம்.



Click it and Unblock the Notifications
