Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தயிர் பன்னீர் ரெசிபி
உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக காய்கறிகளை வைத்து தான் குழம்பு செய்வோம். ஆனால் இந்த தயிரை வைத்து கூட குழம்பு செய்யலாம். அதுவும் பால் பொருட்களில் ஒன்றான பன்னீரையும் அத்துடன் சேர்த்து, காரம் பிடிக்காதவர்களுக்கு ஏற்றவாறு குழம்பு செய்யலாம். பொதுவாக இந்த மாதிரியான காரமில்லாத குழம்பு குழந்தைகளுக்கு தான் பிடிக்கும்.
எனவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மதிய வேளையில் சமைக்க வேண்டு

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (சிறிதாக வெட்டியது)
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - 2 கப் (அடித்தது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் பன்னீர் துண்டுகளை போட்டு 2-3 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி, அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து, உப்பு போட்டு, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட வேண்டும். (குழம்பு சற்று தண்ணீர் போன்று இருக்க வேண்டுமெனில் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொண்டு கொதிக்க விடலாம்.)
குழம்பு நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, கொத்தமல்லி தூவி, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
இப்போது சுவையான தயிர் பன்னீர் ரெசிபி ரெடி!!! இதனை சாதம், புலாவ் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
