Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்!
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Pacharisi Appam Recipe In Tamil: பள்ளி விடுமுறை காலம் என்பதால் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் நிச்சயம் அடிக்கடி ஏதாவது சாப்பிட கேட்பார்கள். அப்போது கடைகளில் எவ்வளவு வாங்கி கொடுத்தாலும், கட்டுபடியாகாது. அப்படிப்பட்ட சூழலில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் பணமும் மிச்சம், ஆரோக்கியமானதும் கூட. அதுவும் உங்கள் வீட்டில் 1 கப் பச்சரிசி இருந்தால், அதைக் கொண்டு அப்பம் செய்யும் போது, குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பச்சரிசி அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சரிசி அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* சர்க்கரை - 1/3 கப்
* காய்ச்சி ஆற வைத்த பால் - 3-4 டேபிள் ஸ்பூன்
* நறுக்கிய தேங்காய் - சிறிது (நெய்யில் வறுத்தது)
* வறுத்த முந்திரி - சிறிது
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 2 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி
2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, அரிசியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, பெரிய
வடிகட்டியில் அரிசியைப் போட்டு 30 நிமிடம் அப்படியே விட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் அரிசியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை சல்லடையால் சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சலித்த மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன்
உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஏலக்காய் தூள், சோம்பு, வறுத்த தேங்காய் மற்றும்
முந்திரியை சேர்த்து, அதன் பின் சோம்பு சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில்
எடுத்து, எண்ணெயில் நேரடியாக ஊற்ற வேண்டும்.
* பின் அந்த மாவின் மேல் எண்ணெயை அள்ளி ஊற்றி, அடிப்பகுதி
பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான பச்சரிசி மாவு
அப்பம் தயார்.



Click it and Unblock the Notifications
