சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்!

Sun Transit In Hasta Nakshatra 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

Sun Transit In Hasta Nakshatra 2026 Luck Will Shine For These Zodiac Signs Until October 11

இந்நிலையில் சூரியன் செப்டம்பர் 27 ஆம் தேதி அஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆவார். சூரியன் இந்த நட்சத்திரத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி வரை இருந்து, பின் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைவார். சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.

இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பதோடு, நிதி நிலையிலும், தொழிலிலும் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். முக்கியமாக ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக நிதி ரீதியாக நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.

கன்னி

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரும். முக்கியமாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சிலருக்கு வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.

மீனம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பண பிரச்சனைகளை இதுவரை எதிர்கொண்டு வந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பள்ளது. புதிய வேலையை தொடங்க இக்காலம் மிகவும் உகந்ததாக இருக்கும்.

தனுசு

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் வருமானத்தை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கடகம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிக்க வைக்கும். தன்னம்பிக்கை இரட்டிப்பாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நடப்பதோடு, அதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, September 29, 2026, 11:24 [IST]
Desktop Bottom Promotion