Latest Updates
-
வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் செருப்பு வைப்பது உங்கள் வாழ்க்கையில் வறுமையை உண்டாக்குமாம் -
Vastu Tips: வாஸ்துப்படி, வீட்டின் இந்த 4 இடத்தில் கண்ணாடியை வையுங்க.. வீட்டில் செல்வம் இரட்டிப்பாகும்! -
இந்தியாவின் மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட முதல் அரசர் யார் தெரியுமா? இராஜ ராஜ சோழன் இல்லையாம் -
அக்குள் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க! -
Kollu Benefits: அடிக்கடி கொள்ளு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த 4 ராசிக்காரங்க அதிகாரத்தின் மீது பேராசை கொண்டவர்களாக இருப்பார்களாம் -
அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, உடல் எடை இருமடங்கு வேக வேகத்தில் குறையும்.. -
இன்றைய ராசிபலன் 06 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும்
மொறுமொறுப்பான வாழைப்பூ பக்கோடா - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.!
Vazhaipoo Pakoda Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? பொதுவாக வாழைப்பூ இருந்தால், அதை பொரியல், வடை என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த வாழைப்பூ கொண்டு கூட பக்கோடா செய்யலாம் தெரியுமா? இந்த பக்கோடா மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக வாழைப்பூ சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த பக்கோடாவை செய்து கொடுத்தால், போட்டி போட்டு சாப்பிடுவார்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி அடிக்கடி கேட்டால், ஒருமுறை இந்த வாழைப்பூ பக்கோடாவை செய்து கொடுங்கள். இந்த வாழைப்பூ பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த வாழைப்பூ பக்கோடாவின் எளிய செய்முறை காத்துவாக்குல சமையல் என்னும் இன்ஸ்டா தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டில் இருப்போர் பக்கோடா பிரியர் என்றால், நிச்சயம் ஒருமுறை இந்த பக்கோடாவை செய்து கொடுங்கள். அதுவும் இந்த பக்குவத்தில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைப்பூ - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கடலை பருப்பு - 100 கிராம்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பெரிய வெங்காயம் - 3
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கடலை மாவு - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, ஊற வைத்த கடலைப் பருப்பை மிக்சர் ஜாரில்
போட்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, சோம்பு, வரமிளகாய், மஞ்சள் தூள்
சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை
எடுத்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, சிறிது கொத்தமல்லி,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொரகொரவென்று அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பு
கலவையை சேர்த்து, கைகளால் ஒருசேர பிசைய வேண்டும்.
* பிறகு அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து, நீர் எதுவும்
சேர்க்காமல் நன்கு இறுக்கமாக பிசைந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லேசாக
உருட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
மொறுமொறுப்பாக வாழைப்பூ பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications











