Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
வாழைப்பூ பொரியலை ஒருமுறை இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Vazhaipoo Poriyal Recipe In Tamil: வாழைப்பூ உடலுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை உணவில் வாழைப்பூவை சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஆனால் உங்கள் வீட்டில் யாரும் வாழைப்பூவை சாப்பிடமாட்டார்களா? அப்படியே சாப்பிட்டாலும் வாழைப்பூ வடையை தான் சாப்பிடுவார்களா?
வாழைப்பூவில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற வேண்டுமானால், அதை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது. அதாவது வாழைப்பூவைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டால் தான், அதில் உள்ள முழு சத்துக்களையும் பெறலாம். அதுவும் வாழைப்பூவை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பொரியல் செய்தால், வாழைப்பூ பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வாழைப்பூ பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பூ பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வாழைப்பூ - 1 (பொடியாக நறுக்கியது)
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் கழுவி, பின் அதில் சிறிது நீரை
ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை நீருடன் அப்படியே
சேர்த்து, மஞ்சள் தூளைத் தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட்டு, மூடி வைத்து, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக
வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்து, அத்துடன்
சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* வாழைப்பூ நன்கு வெந்ததும், அதில் அரைத்த தேங்காயை சேர்த்து நன்கு
கிளறி, குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைத்து
இறக்கினால், சுவையான வாழைப்பூ பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications
