Latest Updates
-
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
வாழைப்பூ வடை
காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பூ வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பூ வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1/4 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* வாழைப்பூ - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3-4 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை சுடுநீரில் போட்டு அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வாழைப்பூவை பொடியாக நறுக்கி, அதை மோரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பருப்புகள் நன்கு ஊறியதும், அதை பிளெண்டரில் போட்டு ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மோரில் ஊற வைத்துள்ள வாழைப்பூவைப் பிழிந்து சேர்த்துக் கொள்ளவும்.
* அதன் பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காயத் தூள், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைப்பூ வடை தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
