Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
அடுத்தமுறை இட்லி, தோசைக்கு இந்த மாதிரி சாம்பார் வையுங்க... ஹோட்டல் சாம்பாரை விட சூப்பரா இருக்கும்...!
Tiffin Sambar Recipe in Tamil: இட்லி, தோசை மற்றும் பொங்கல் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சட்னிதான். சட்னி வகைகள் சுவையாக இருப்பதுடன் செய்வதற்கும் மிகவும் எளிதானதாக இருக்கும். என்னதான் சட்னி சுவையானதாக இருந்தாலும் இட்லியையோ அல்லது தோசையையோ சாம்பாரில் ஊற வைத்து சாப்பிடுவதில் உள்ள இன்பத்திற்கு இணையே இல்லை.
பொதுவாக சாம்பார் வைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதால் மக்கள் அதை தவிர்க்கின்றனர். ஆனால் நேரம் இருக்கும் போது இட்லி, தோசைக்கு சாம்பார் வைத்து கொடுத்தால் வீட்டில் எல்லோரும் நிச்சயம் அதிகம் சாப்பிடுவார்கள்.

இன்று உங்க வீட்டில் இட்லியோ அல்லது தோசையோ செய்யப்போகிறீர்கள் என்றால் இந்த சிம்பிளான டிபன் சாம்பாரை செய்து பாருங்கள். இந்த சாம்பார் செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் சுவையில் ஹோட்டல்களில் பரிமாறப்படும் சாம்பாரை விட சூப்பராக இருக்கும். இந்த பதிவில் இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் சாம்பாரை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- துவரம் பருப்பு - 150 கிராம்
- பாசிப் பருப்பு - 100 கிராம்
- சின்ன வெங்காயம் - 20
- தக்காளி- 2
- பீன்ஸ்- 10
- கேரட்- 2
- உருளைக்கிழங்கு- 1
- பச்சை மிளகாய் - 3
- வர மிளகாய் - 4
- புளி - நெல்லிக்காய் அளவு
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 2 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- சாம்பார் தூள் - தேவையான அளவு
- வெல்லம் - சிறிதளவு
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்தமல்லி - சிறிதளவு
- நெய் - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் 150 கிராம் துவரம் பருப்பையும், 100 கிராம் பாசிப்பருப்பையும் நன்றாக கழுவி, 1/2 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதே சமயம் புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.
- இப்போது ஒரு வானலில் எண்ணெய் ஊற்றி ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கடுகு போட்டு கடுகு பொரிந்தவுடன், 4 வர மிளகாய், 1/2 ஸ்பூன் வெந்தயம், 1 ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், 20 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும்.
- வெங்காயம் சற்று வதங்கியதும் முதலில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும். பின்னர் இரண்டு தக்காளியை நறுக்கி சேர்த்து கொள்ளவும். தக்காளி நன்கு குலையும் வரை நன்றாக வதக்கவும்.
- தக்காளி வதங்கிய பின்னர் நறுக்கி வைத்த பீன்ஸ், காரட், கீறிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- இப்போது ஊற வைத்த புளியில் இருந்து எடுத்த புளி தண்ணீரை ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.
- பின்னர் வேக வைத்த பருப்பை நன்றாக கடைந்து கொள்ளவும். பருப்பு கெட்டியாக இருக்கும் என்பதால் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
- காய்கறிகள் வெந்த பின் கரைத்து வைத்த பருப்பு தண்ணீரை ஊற்றவும். பொதுவாக டிபன் சாம்பார் காரம், புளி சற்று கம்மியாக இருத்தல் வேண்டும். இப்போது சாம்பார் ஒரு கொதி வந்த பிறகு தேவையான அளவு சாம்பார் பொடி சேர்த்து, இதனோடு ஒரு துண்டு வெல்லம் போடவும்.
- கடைசியாக இரண்டு கொத்து கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி தழை, வீட்டில் செய்த நெய் சிறிதளவு ஊற்றி சாம்பாரை இறக்கி வைத்தால் சூப்பரான டிபன் சாம்பார் ரெடி.
- இந்த சூப்பரான சாம்பார் இட்லி, தோசை, பொங்கல், வடை என்று அனைத்து டிபன் வகைகளுக்கும் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











