Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும் -
கேது நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
5 முக்கிய தொகுதிகளை கொண்ட திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சுவையின் ரகசியம் இதாங்க! -
IPL 2026: சிஎஸ்கே Vs ஆர்சிபி ஜோதிட கணிப்பு - எந்த அணி வெற்றி பெறும்? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் ஒன்றிணையும் 4 கிரகங்கள்: ஏப்ரல் 11 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
ருசியான கறிவேப்பிலை சிக்கன் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க -
ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர் -
குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரல் 11 முதல் இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகுது! -
செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 05 ஏப்ரல் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு நினைச்சது நடக்கும் நாளாக இருக்குமாம்
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, உடல் எடை இருமடங்கு வேக வேகத்தில் குறையும்..
Summer Weight Loss Karuppu Kavuni Arisi Kanji Recipe In Tamil: இயற்கை நமக்கு அளித்த ஒரு அற்புதமான உணவுப் பொருள் தான் கருப்பு கவுனி அரிசி. இந்த அரிசியில் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்களும், புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களும் அதிகம் உள்ளன. இந்த அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து கோடைக்காலத்தில் குடிக்கும் போது, உடல் வலிமை அதிகரிப்பதோடு, உடலும் குளுகுளுவென்று இருக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போர், இந்த கஞ்சியை தினமும் காலையில் குடித்து வந்தால், நீண்ட நேரம் வயிறு நிரம்பி, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கவும் உதவும். முக்கியமாக இப்படி கருப்பு கவுனியை கஞ்சி செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கருப்பு கவுனி அரிசியைக் கொண்டு எப்படி கஞ்சி செய்வதென்று கவிதா சமையலறை என்னும் யூடியூப் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு கருப்பு கவுனி அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கவுனி அரிசி - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு + 5 கப்
* பூண்டு - 4-5 பல் (தட்டியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மோர் - தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கருப்பு கவுனி அரிசியை நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து நீரை வடிகட்டிவிட்டு, அரிசியை ஜாரில் போட்டு
கொரகொரவென்று ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் வைக்கும்படியான ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் 5
கப் நீர ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும்,
அரைத்த கருப்பு கவுனி அரிசியை சேர்த்து, அத்துடன் தட்டி வைத்துள்ள
பூண்டு பற்கள், சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, ஸ்டேண்ட்டை
வைத்து, அதன் மேல் அரிசி வெந்து கொண்டிருக்கும் பாத்திரத்தை வைத்து
மூடி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கவுனி அரிசி கஞ்சியை ஒரு
பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தேவையான அளவு மோரை சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும்
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கிளறினால், சுவையான கருப்பு கவுனி அரிசி
கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











