Latest Updates
-
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
One Pot Sambar Rice Recipe in Tamil: இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடுதான். வீட்டு உபயோக சிலிண்டர் புக் செய்தால் எப்போது வரும் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். எனவே சாம்பார், ரசம், பொரியல் என தனித்தனியாக செய்யாமல் ஒரே டிஷ்ஷாக செய்து விடுவது நல்லது. அதிக கேஸ் தேவைப்படமால் அதேசமயம் டக்குனு சுவையாக சமைக்க ஆசைப்படுகிறீர்களா?
அப்படியானால் இந்த சாம்பார் சாதத்தை செய்யுங்கள். இந்த சாம்பார் சாதத்தை தனித்தனியாக சமைக்க வேண்டாம், ஒரு குக்கர் இருந்தால் போதும் அதிக எரிவாயுவை செலவழிக்காமல் டக்குனு இந்த சாதத்தை செய்துவிடலாம். மேலும் இது அனைவருக்கும் பிடிக்கும் படி மிகவும் சுவையாகவும் இருக்கும். ஒரு முறை இதை செய்து விட்டால் அதன் பிறகு வாரம் ஒருமுறையாவது இதை செய்து விடுவீர்கள்.

உங்களுக்கு சுவையான சாம்பார் சாதத்தை எப்படி குக்கரில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈஸியான சாம்பார் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் தனியா
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் கடுகு
- 4 வர மிளகாய்
- 1/4 கப் துருவிய தேங்காய்
சாம்பார் சாதம் செய்ய:
- 1 கப் அரிசி
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1/4 கப் உருளைக்கிழங்கு
- 1/4 கப் பச்சை பீன்ஸ்
- 1/4 கப் பூசணிக்காய்
- 1/2 கப் வெங்காயம், நறுக்கியது
- 2 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 கப் புளி தண்ணீர்
- 1 டேபிள் ஸ்பூன் வெல்லம்
- 4 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய், உடைத்தது
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
அலங்கரிக்க:
- 3 ஸ்பூன் நெய்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
செய்முறை:
- ஒரு கடாயை மிதமான தீயில் சூடாக்கி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும். அவற்றை மிதமான தீயில் பொன்னிறமாகவும் , வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பின்னர் தனியா மற்றும் கடுகு சேர்த்து கிளறவும். வாசனை வரும் வரை அல்லது கடுகு வெடிக்கும் வரை வறுக்கவும்.
- கடைசியாக, சிவப்பு மிளகாய் மற்றும் தேங்காயைச் சேர்த்து கிளறவும்.
- தேங்காய் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து, இறுதியாக தட்டுக்கு மாற்றி ஆற வைக்கவும்.
- ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுதாக அரைக்கவும்.
- அரிசி மற்றும் பருப்பை கழுவி, போதுமான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறவைத்து சமைப்பது அதிக எரிவாயுவை மிச்சப்படுத்தும்.
- தண்ணீரை வடிகட்டி, ஒரு பிரஷர் குக்கரில் நறுக்கிய காய்கறிகள் மஞ்சள் தூள், புளிததண்ணீர், வெல்லம், அரைத்த புதிய சாம்பார் மசாலா தேங்காய் விழுது மற்றும் 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 4 விசில் வரும் வரை சமைக்கவும், பின்னர் அடுப்பை அணைக்கவும். அழுத்தம் இயற்கையாக வெளியேறட்டும்.
- சாம்பார் சாதத்தை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடான பிறகு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் வர சிவப்பு மிளகாய் சேர்க்கவும். கடுகு மற்றும் சீரகம் வெடிக்கும் வரை வதக்கவும்.
- குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு கிளறவும். பின்னர் தலைப்பை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் நெய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான குக்கர் சாம்பார் சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications











