Latest Updates
-
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்? -
18 ஆண்டுக்கு பின் மகம் நட்சத்திரம் செல்லும் கேதுபகவான்: இந்த 3 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்... -
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க... -
குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 4 ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூடிவரப்போகுதாம்...! -
இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் - இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு அரசிலுடன் தொடர்புடைய புகழ்பெற்ற தமிழ்நாட்டு கோவில்கள் என்னென்ன தெரியுமா? -
12 ஆண்டுகள் கழித்து உச்ச வீட்டில் நுழையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது.. -
சுரைக்காய் வாங்குனா வேர்க்கடலையுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க... செம சைடிஷா இருக்கும்...! -
1 கப் தயிரும், 2 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்..
வட இந்தியாவில் நவராத்திரியில் செய்யப்படும் குட்டு ஹி பூரி தயாரிக்கும் முறை!!
குட்டு ஹி பூரி ரெசிபி பண்டிகை காலங்களில் கடைப்பிடிக்கும் விரதத்திற்கான உணவாகும். இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்
பண்டிகைகளின் போது வட இந்தியர்கள் தாங்கள் கடைபிடிக்கும் விரதத்திற்காக குட்டி கி பூரி ரெசிபியை தயாரிப்பர். இந்த ரெசிபியை ஸ்பெஷல் மாவான பாப்பரையை கொண்டு தயாரிப்பர். இந்த பூரியை விரதத்தின் எதாவது சைடிஸ் கொண்டு சாப்பிடலாம்.
இதே மாதிரி சில விரத ரெசிபிகளாவன : சுகி ஆர்பி , சிங்கார கி பூரி, கட்டு கி சப்ஷி, விரத் வாலா ஆலு, ஆலு டெமாட்டர் சப்ஷி
பாப்பரை மாவு உங்களுக்கு பிசு பிசுப்பு தன்மை இல்லாமலும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாகவும் பயன்படுகிறது. எனவே இதை பிணைவதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. இதுவே ஆலு ஆட்டா மிகவும் பிசைவதற்கு கடினமாக இருக்கும்.
இங்கே வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து பூரி செய்ய வேண்டும். மாவை நன்றாக பிசைவதற்கு சரியான அளவு தண்ணீர் சேர்ப்பது மிகவும் முக்கியம். போதுமான அளவு தண்ணீர் சேர்க்கவில்லை என்றால் மாவை பிசைவதற்கு கடினமாக இருக்கும்.
நீங்கள் எந்த இறைவழிபாடு விழாக்களான நவராத்திரி, ஏகாதசி மற்றும் சிவராத்திரி போன்றவற்றிற்கு விரதம் இருக்க நினைத்தால் அதற்கு இந்த பூரி உணவு சிறப்பாக இருக்கும். சரி வாங்க இப்பொழுது குட்டு கி பூரி ரெசிபி செய்வது எப்படி என்று செய்முறை விளக்க படத்துடனும் வீடியோ மூலமும் காணலாம்.
குட்டு கி பூரி வீடியோ ரெசிபி

Recipe By: மீனா பந்தரி
Recipe Type: மீனா பந்தரி
Serves: 7-8 பூரிகள்
-
வேக வைத்த உருளைக்கிழங்கு (தோலுரித்து மசித்து கொள்ளவும்) - 1
படிக உப்பு (ராக் சால்ட்) - சுவைக்கு
பாப்பரை மாவு - 1கப்
தண்ணீர் - 1/6 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு
-
1. வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.
2. இதனுடன் ராக் சால்ட் சேர்க்கவும்.
3. இதனுடன் இப்பொழுது பாப்பரை மாவு சேர்க்கவும்.
4. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து கொள்ள வேண்டும்.
5. ஒரு கவரால் மூடி அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
6. மாவை சரிசமமாக எடுத்து பந்து போல் உருண்டை உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.
7. சப்பாத்தி கல்லில் எண்ணெய்யை தடவிக் கொள்ளவும்.
8. இப்பொழுது ஒவ்வொரு உருண்டையாக வைத்து பூரி போல் தேய்க்க வேண்டும்.
9. பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
10. பூரியை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.
11. பூரி புஷ் என்று எம்மி வந்ததும் மறுபக்கம் திருப்பி சற்று வேக விட வேண்டும்.
12. பூரியானது பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
13. சூடான பூரியை தட்டில் வைத்து பரிமாறவும்.
- 1. தண்ணீர் தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும். மாவு ஒட்டும் பதத்தில் இருந்தால் இன்னும் கொஞ்சம் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 2. பிசைந்த மாவு தேய்ப்பதற்கு கொஞ்சம் சரியான பதத்தில் இல்லா விட்டால் 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து அப்புறம் பயன்படுத்தவும்.
- 3. உருளைக்கிழங்குக்கு பதிலாக ஆர்மியை பயன்படுத்தலாம்.
- பரிமாறும் அளவு - 1 பூரி
- கலோரிகள் - 133 கலோரிகள்
- கொழுப்பு - 33 கிராம்
- புரோட்டீன் - 7 கிராம்
- கார்போஹைட்ரேட் - 27 கிராம்
- நார்ச்சத்து - 3 கிராம்
படிப்படியான செய்முறை விளக்கம் : குட்டு கி பூரி ரெசிபி செய்வது எப்படி
1. வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.
2. இதனுடன் ராக் சால்ட் சேர்க்கவும்.
3. இதனுடன் இப்பொழுது பாப்பரை மாவு சேர்க்கவும்.
4. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து கொள்ள வேண்டும்.
5. ஒரு கவரால் மூடி அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
6. மாவை சரிசமமாக எடுத்து பந்து போல் உருண்டை உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.
7. சப்பாத்தி கல்லில் எண்ணெய்யை தடவிக் கொள்ளவும்.
8. இப்பொழுது ஒவ்வொரு உருண்டையாக வைத்து பூரி போல் தேய்க்க வேண்டும்.
9. பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
10. பூரியை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.
11. பூரி புஷ் என்று எம்மி வந்ததும் மறுபக்கம் திருப்பி சற்று வேக விட வேண்டும்.
12. பூரியானது பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
13. சூடான பூரியை தட்டில் வைத்து பரிமாறவும்.

Click it and Unblock the Notifications