Just In
- 3 hrs ago
உங்க குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை 50% தள்ளுபடி விலையில் இப்போதே அமேசானில் வாங்குங்கள்!
- 3 hrs ago
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...
- 4 hrs ago
உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்...!
- 4 hrs ago
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
Don't Miss
- Sports
பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து
- Finance
870 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம்.. கவலையில் வேஃபேர் ஊழியர்கள்..!
- News
"முடியாது".. கண்டிப்பாக சொன்னா அமித் ஷா? கொங்கில் என்ன நடக்கும்? எடப்பாடிக்கு எல்லா பக்கமும் இடி!
- Automobiles
நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல் இப்பவே வெளியானது!.. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!
- Movies
மச்சான்ஸ்க்கு குட் நியூஸ்..இரட்டை குழந்தைகளுடன் கோவிலில் வலம் வந்த நமீதா!
- Technology
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Xiaomi நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்.!
- Travel
உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
கேரளா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கடலை கறி
உங்களுக்கு கேரளா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? வீட்டில் கேரளா ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கடலை கறியை வீட்டில் செய்து சாப்பிடுங்கள். இந்த கேரளா கடலை கறி சப்பாத்தி, சாதம், பூரி, அப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு கேரளா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கடலை கறி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கடலை கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சுண்டல் வேக வைப்பதற்கு...
* கருப்பு சுண்டல் - 1 1/2 கப் (நீரில் 8 மணிநேரம் ஊற வைத்தது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
கிரேவிக்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 3-4
* பச்சை ஏலக்காய் - 3
* பட்டை - 1 துண்டு
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
* பூண்டு - 1 டீஸ்பூன் (துருவியது)
* வெங்காயம் - 1 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சுடுநீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் -2-3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் ஊற வைத்துள்ள கருப்பு சுண்டலை போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதன்பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து குறைவான தீயில் வைத்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விட வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த சுண்டல் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளற வேண்டும். கிரேவி கெட்டியாக இருந்தால், 1/4 கப் சுடுநீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* கிரேவியின் சுவையை இன்னும் அதிகரிப்பதற்கு, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளித்து, கிரேவியில் ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் கழித்து பரிமாறினால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: yummyoyummy