Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Thakkali Malli Thokku Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு ஒரு அருமையான ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி அரைத்து போரடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக தொக்கு செய்து சாப்பிடுங்கள்.

அதுவும் வீட்டில் 1/2 கிலோ தக்காளியும், 1/2 கட்டு துவையலும் இருந்தா, அவற்றைக் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த தொக்கு இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மதிய வேளையில் சமைக்க பிடிக்காவிட்டால், இந்த தொக்கை செய்தாலே போதும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த தக்காளி மல்லி தொக்கு குறித்து கோவை கஃபே என்னும் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு தக்காளி மல்லி தொக்கு ரெசியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி மல்லி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்ககைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 1/2 கிலோ
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 2
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தாளிப்பதற்கு..
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - 2 கொத்து
* அரைத்த விழுது
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
வறுத்து பொடிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெநதயம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி மற்றும் கொத்தமல்லியை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு பற்கள், வரமிளகாய், சாம்பார் தூள், சிறிய
நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி விட்டு,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து, 10 நிமிடம் மிதமான
தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு மற்றும்
வெந்தயத்தை சேர்த்து நன்கு பொரிய விட்டு இறக்கி குளிர வைத்து அரைத்து
நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் துவையல் நன்கு கொத்தபின் மூடியைத் திறந்து, அதில்
பொடித்து வைத்துள்ளதை கடுகு வெந்தய பொடியை சேர்த்து கிளறி, 3 கிடம்
வேக வைத்து, சிறிது வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான
தக்காளி மல்லி தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications
