Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Manga Thakkali Thokku Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் டிபனுக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே பெரிய வேலையாக உள்ளதா? அதுவும் காலையில் இட்லி, தோசை தான் பெரும்பாலும் உங்கள் வீட்டில் செய்வீர்களா? இந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சாம்பார், சட்னியை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் மாங்காய் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சைடு டிஷ் செய்யுங்கள்.

தற்போது மாங்காய் சீசன் என்பதால், இந்த சீசன் இருக்கும் போதே மாங்காய் எப்படியெல்லாம் சமைத்து சாப்பிட முடியுமோ, அப்படியெல்லாம் செய்து சுவைத்து பார்த்து விட வேண்டும். அதுவும் வீட்டில் மாங்காயும், தக்காளியும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு தொக்கு செய்யுங்கள். இந்த மாங்காய் தக்காளி தொக்கு இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் இதை சாதத்திற்கு சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம். ஒருமுறை இந்த தொக்கை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.
இந்த மாங்காய் தக்காளி தொக்கு குறித்து மைலைஃப்ஸ்டைல்அண்ட்குக்கிங் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு மாங்காய் தக்காளி தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் தக்காளி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாங்காய் - 1
* தக்காளி - 3
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 1
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாங்காயை எடுத்து இரண்டு பெரிய துண்டாக வெட்டி எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு தக்காளியையும் இரண்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மாங்காய், தக்காளி, பூண்டு பற்கள்
மற்றும் 1 பச்சை மிளகாயை சேர்த்து மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மாங்காய் மற்றும் தக்காளியை
திருப்பிப் போட்டு மீண்டும் மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* மாங்காயும், தக்காளியும் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, அதை மிக்சர் ஜாரில் சேர்த்து,
அத்துடன் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் மாங்காயின் தசைப் பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்து,
அதையும் ஜாரில் சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய 1 வெங்காயம், சிறிது கொத்தமல்லி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து,
கொரகொரவென்று அரைத்துக் கொண்டால், சுவையான மாங்காய் தக்காளி தொக்கு
தயார்.



Click it and Unblock the Notifications