Latest Updates
-
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க..
Salem Manga Curry Recipe In Tamil: கோடைக்காலம் என்பதால் மாங்காய் விலைக் குறைவில் கிடைக்கும். இந்த மாங்காயை வெறுமனே சாப்பிடலாம் அல்லது அதைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்தும் சாப்பிடலாம். உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் மாங்காய் பிடிக்குமானால், அந்த மாங்காயை வாங்கி ஒருமுறை சேலத்து மாங்காய் கறியை செய்யுங்கள். இது சேலம் பகுதியில் பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு எளிமையான சைடு டிஷ். இந்த சேலத்து மாங்காய் கறியை நடிகர் அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒருமுறை செய்திருப்பார். இந்த ரெசிபியை ஒருமுறை உங்கள் வீட்டிலும் செய்து, வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.

இந்த சேலத்து மாங்காய் கறி குறித்து சக்கரைசாதமும் வடைக் கறியும் என்னும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த சேலத்து மாங்காய் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேலத்து மாங்காய் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
`
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தேங்காய் - 1/4 மூடி (நறுக்கியது)
* வரமிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* மாங்காய் - 1 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு, 1 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு, 1 டீஸ்பூன் மல்லி, 1/4 டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன்
வெந்தயம் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய 1 வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தேங்காய் மற்றும் வரமிளகாயை சேர்த்து 3
நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி
மூடி வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் மாங்காய் துண்டுகளை
சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சேலத்து
மாங்காய் கறி தயார்.



Click it and Unblock the Notifications
