சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!

Saturn Mercury Make Labh Drishti Yog On 22 May 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தங்களின் நிலைகளாலும், பார்வையாலும், மற்ற கிரகங்களுடனான சேர்க்கைகளாலும் யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் மே மாதத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், நீதிமான் சனி பகவானும் தங்களின் நிலைகளின் மூலம் ஒரு அற்புதமான யோகத்தை உருவாக்கவுள்ளனர். அப்படி உருவாகும் யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சிலருக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

Saturn Mercury Make Labh Drishti Yog On 22 May 2026 List Of Lucky Zodiac Signs

வேத நாட்காட்டியின் படி, மே 22 ஆம் தேதி புதனுக்கும், சனி பகவானுக்கும் இடையே 90 டிகிரியில் ஒரு சிறப்பான சேர்க்கையால் லாப திருஷ்டி யோகம் உருவாகவுள்ளது. இந்த சேர்க்கை அறிவு, செயல், ஒழுக்கம், அத்துடன் தொழில் மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த யோகத்தினால் 5 ராசிக்காரர்கள் வாழ்வில் மிகவும் அற்புதமான மாற்றங்களையும், பலன்களையும் பெறவுள்ளனர். இப்போது சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் புதிய முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முடிவெடுக்கும் திறன்களானது முன்பை விட சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களின் ஆதரவு கிடைப்பதால், வேலையை உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

கன்னி

சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சந்தித்து வந்த மன அழுத்தம் குறையும்.

துலாம்

சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் படைப்பாற்றல் மேம்படும். கலை, எழுத்து, ஊடகம் அல்லது படைப்புத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு அற்புதமாக இருக்கும். செய்யும் வேலையில் வெற்றிகள் குவியும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, தம்பதிகளிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும்.

மகரம்

சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களும் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்க நபரின் ஆதரவு கிடைக்கும். இது எதிர்காலத்தில் பெரிதும் உதவியாக இருப்பதோடு, பெரும் வெற்றிக்கு வழிவகுக்கும்.

கும்பம்

சனி புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல செய்தியைப் பெறக்கூடும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். இதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, April 29, 2026, 20:55 [IST]
Desktop Bottom Promotion