Latest Updates
-
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Mercury Transit In Aries On 30 April 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் நிலைகளும், அவற்றால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட புதன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 30 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ஜோதிடத்தில் செவ்வாய் மற்றும் புதனுக்கு இடையே பகை உணர்வு உள்ளது. எனவே இந்த புதன் பெயர்ச்சியானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், இன்னும் சிலருக்கு மோசமாக இருக்கலாம். இப்போது மேஷ ராசிக்கு செல்லும் புதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் புதிய யோசனைகளால் நல்ல லாபத்தையும், வளர்ச்சியையும் காண்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். பண வரவு சிறப்பாக இருந்தாலும், செலவுகளும் அதிகமாக இருக்கும். மேலும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சுத்திறன் மேம்படும். இந்த பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் அர்ப்பணிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகளால் தொழிலில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். மொத்தத்தில் இக்காலம் திடீர் மாற்றங்களுடன், ஏற்றஇறக்கங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் உறவுகளிலும், கூட்டு தொழிலிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் சரியான முறையில் எதையும் அணுகினால், பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்தால், எதையும் சமாளிக்க முடியும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். படைப்பாற்றலும், காதல் வாழ்க்கையும் இப்பெயர்ச்சியால் பாதிக்கப்படலாம். உங்களால் உங்களை சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்பதை நன்கு உணர்வீர்கள்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் வீட்டில் கூடுதல் பொறுப்புக்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் சிலர் புதிய வாகனம் வாங்குவதற்கு திட்டமிடவும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குறுகிய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய நட்புகளால் நன்மைகளை பெறுவீர்கள். பிள்ளைகள் குறித்த கவலை அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் உடலையும், மனதையும் மோசமாக பாதிக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பேச்சு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். திட்டமிட்டு எந்த செலவையும் செய்தால், பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



