Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Mercury Transit In Aries On 30 April 2026: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.

மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. தற்போது புதன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 30 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசிக்கு புதன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முக்கியமாக படிப்பு, வியாபாரம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். அதோடு பேசும் போதும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இப்போது ஏப்ரல் மாத இறுதியில் புதன் மேஷ ராசிக்கு செல்வதால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை செலவழிக்க நேரிடும். மன பதட்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை அவசரமாக எடுக்க நேரிடும். பண விஷயங்களில் நிதானமாக இருக்க வேண்டும். எந்த முடிவையும் சிந்தித்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு நிதி தொடர்பான முடிவையும் பலமுறை யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் முக்கியமான பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இதன் மூலம் வேலையில் அழுத்தம் அதிகரிக்கலாம். காதல் வாழ்க்கையில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தொழில் ரீதியாகவும் பொறுமையாக இருந்து நன்கு யோசித்து எந்த முடிவையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக இக்காலத்தில் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தாயாரின் ஆரோக்கியம் மோசமடையும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை சச்சரவுகள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் மனதளவில் அதிகம் சோர்வடைவீர்கள். மேலும் இக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் ஒரு சவாலான திட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளது, அது மிகவும் கடினமாகத் தோன்றக்கூடும். மேலும் இக்காலத்தில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் பேச்சு பல பிரச்சனைகளில் சிக்க வைக்கும்.
புதன் பெயர்ச்சி பரிகாரங்கள்
மேஷ ராசிக்கு செல்லும் புதனால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க விநாயகரை வழிபடுவது, புதனுக்கு உரிய மந்திரத்தை பாராயணம் செய்வது, பச்சை நிற பொருட்களை தானம் செய்வது, பசுக்களுக்கு தீவனம் அளிப்பது, புதன் கிழமைகளில் விரதம் இருப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


