Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும்
Potato Thayir Kuzhambu Recipe In Tamil: வெயில் காலம் வந்துவிட்டாலே மதிய வேளையில் சமைக்கவும் பிடிக்காது, சாப்பிடவும் பிடிக்காது. அப்படியே சாப்பிட்டாலும் தயிர் சாதம், மோர் சாதம் என்று தான் சாப்பிட விரும்புவோம். ஆனால் இப்படி எப்போதும் வெறும் தயிரை சாப்பிடுவதற்கு பதிலாக, அந்த தயிரைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிட்டால், சுவையாகவும் இருக்கும், உடலுக்கும் நல்லது கூட.

பொதுவாக தயிர் கொண்டு செய்யக்கூடிய குழம்பை பலவிதங்களில் செய்வார்கள். அதில் இப்போது உருளைக்கிழங்கை சேர்த்து செய்யக்கூடிய தயிர் குழம்பு குறித்து தான் பார்க்கப் போகிறோம். இந்த தயிர் குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
இந்த உருளைக்கிழங்கு தயிர் குழம்பு குறித்து ரேகா என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு தயிர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு தயிர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து நறுக்கியது)
* உப்பு - சிறிது
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* புளிப்பில்லாத கெட்டி தயிர் - 400 மிலி
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை
சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும்
பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
தூவி கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் ப்ரை செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி, புளிப்பில்லாத கெட்டி
தயிரை ஊற்றி கிளறி, லேசாக சூடானதும் அதை இறக்கினால், சுவையான
உருளைக்கிழங்கு தயிர் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
