Latest Updates
-
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வெயில் கொடுமையா? இந்த 4 செடிகள் இருந்தா போதும்… வீடே ஏசி போல ஜில்லுனு இருக்கும்! -
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா?
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
Mothers Day 2026: ஒரு குடும்பத்தின் ஆணி வேர் அம்மா. ஒருநாள் அம்மா ஊருக்கு சென்றாலும், அந்த வீட்டில் எந்த வேலையும் சரியாக நடக்காது. அந்த அளவில் அம்மா குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் அங்கமாக உள்ளார். இப்படிப்பட்ட அம்மாவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் சற்றும் முகம் சுளிக்காமலும், நேரம் காலம் பராமலும் பணிவிடைகளை செய்யும் அன்னையர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லியும், பரிசளித்தும் பலர் அன்னையர் தினத்தை கொண்டாடுவார்கள். ஆனால் இதையெல்லாம் செய்வதை விட, அம்மாவின் ஆரோக்கியத்தில் முதலில் அக்கறை காட்ட வேண்டும். அதுவும் உங்கள் அம்மாவிற்கு 50 வயதிற்கு மேலாகிவிட்டால், அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க அவர்களின் உணவில் கவனம் செலுத்தி, அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ குறிப்பிட்ட உணவுகளை தினசரி எடுக்க வைக்க வேண்டும்.
ஊட்டச்சத்து நிபுணரான தீப்ஷிகா ஜெயின் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். பொதுவாக வயது அதிகரிக்கும் போது பெண்கள் தங்கள் உடல் மற்றும் மனதளவில் பலவிதமான பிரச்சனைகளை, சவால்களை எதிர்கொள்வார்கள். இதை சமாளிக்க உணவுகள் பெரிதும் உதவி புரியும். எனவே உங்கள் அம்மா எந்த அவஸ்தையும் படாமல் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 உணவுகளை தினமும் சாப்பிட வையுங்கள்.
1. கருஞ்சீரகம்
"அளவில் மிகவும் சிறிய அளவிலான கருஞ்சீரக விதைகளை ஒவ்வொரு தாய்மாரும் அவசியம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை உடலினுள் ஏற்படும் வீக்கம்/அழற்சியை குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் மற்றும் மூட்டு வலி, ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்" என்று கூறினார்.
2. பீட்ரூட்
"ஒவ்வொரு தாய்மாரும் சாப்பிட வேண்டிய மற்றொரு உணவுப் பொருள் தான் பீட்ரூட். இந்த பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் இருப்பது மட்டுமின்றி, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவி புரியும்" என்று கூறினார். அதற்கு இந்த பீட்ருட்டை ஜூஸாகவோ, பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.
3. ஆளி விதை
50 வயதை எட்டிய அம்மாக்கள் தினமும் ஆளி விதையை உட்கொண்டு வந்தால், அது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்து, ஹார்மோன்களை சமநிலையில் பராமரிப்பு உதவுகிறது. மேலும் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பைட்டோஈஸ்ட்ரோஜென்கள் அதிகம் இருப்பதால், இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகளைக் குறைக்கும். அதற்கு இந்த ஆளி விதைகளை 1 டீஸ்பூன் எடுத்து அரைத்து, அதை ஸ்மூத்தியுடனோ அல்லது தயிருடனோ சேர்த்து உட்கொள்ளலாம்.
4. டார்க் சாக்லேட்
தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மக்னீசியம் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும், உடல் சோர்வை போக்கும் மற்றும் மனநிலையை மேம்படுத்தும். எனவே தினமும் 70% டார்க் சாக்லேட் நிறைந்ததை ஒரு துண்டு உங்கள் அம்மாவிற்கு சாப்பிட கொடுங்கள். இது அவர்களுக்கு ஆற்றலையும் வழங்கும், மன ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
5. சியா விதைகள்
பல அம்மாக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை என்றால் வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகள் தான். இதற்கு மன அழுத்தமும், சீரற்ற உணவுப் பழக்கமும் தான் காரணம். சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இது ஆரோக்கியமான செரிமானத்திற்கும் ஆதரவளிக்கிறது. அதோடு இது நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கவும் செய்யும். அதற்கு சியா விதைகளை நீரில் ஊற வைத்து, அதை வெறும் நீரிலோ, எலுமிச்சை ஜூஸ் உடனோ அல்லது நன்னாரி சர்பத்துடனோ சேர்த்து குடிக்க கொடுங்கள். இதனால் குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும், நாள் முழுவதும் உடலில் ஆற்றலும் நிலைத்திருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

