Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
50 வயசானாலும் அழகாக ஜொலிக்கணுமா? அப்ப சரும நிபுணர் சொல்ற இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடுங்க..
Skin Care Tips In Tamil: நமது உடல் ஆரோக்கியத்தை சருமத்தைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம் தெரியுமா? நமது உடல் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளதோ, அந்த அளவு நமது சருமம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அழகாக காட்சியளிக்க விரும்பினால், முதலில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினாலே போதும்.
சொல்லப்போனால் நாம் என்ன தான் சருமத்திற்கு கண்ட ஃபேஸ் பேக்குகள், ஸ்க்ரப்புகள், ஃபேஸ் மாஸ்க்குகள், ப்ளீச்சிங் என்று செய்தாலும், அதனால் குறைவான பலன்களையே பெற முடியும். உண்மையில் சரும அழகை மேம்படுத்த நினைத்தால், உண்ணும் உணவுகளில் முதலில் கவனம் செலுத்தினாலே போதும், எத்தனை வயதானாலும் இளமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கலாம்.

நீங்கள் 50 வயதானாலும் அழகாக, பொலிவாக காட்சியளிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சரும நிபுணரான டாக்டர். மோகனலட்சுமி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள 5 விதமான உணவுகளை தினமும் உட்கொண்டு வாருங்கள். இந்த உணவுகளை தினசரி உணவில் தவறாமல் உட்கொண்டு வந்தால் சருமம் பளிச்சென்று பொலிவாவதோடு, உடலும் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும்.
1. நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. இவற்றை தினமும் உட்கொள்ளும் போது, அது இதயத்தை வலிமையாக வைத்துக் கொள்வதோடு, சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று டாக்டர் கூறினார்.
2. கீரைகள்
பசலைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற கீரைகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இந்த கீரைகளை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்வதோடு, உடலில் ஆற்றலும் நிலையாக இருக்கும். முக்கியமாக கீரைகளை அதிகம் உணவில் சேர்க்கும் போது, சருமத்தின் ஆரோக்கியமும் அழகும் மேம்படுவதாக டாக்டர் கூறினார்.
3. பழங்கள்
தினமும் ஏதாவது இரண்டு பழங்களை சாப்பிட வேண்டும் என்று டாக்டர் கூறினார். இப்படி எடுக்கும் போது அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று டாக்டர் மோகனலட்சுமி கூறினார். அதுவும் பப்பாளி, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களும், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளன. எனவே நீண்ட காலம் இளமையாக, அழகாக இருக்க விரும்பினால், எந்த பழம் பிடிக்குமோ தவறாமல் சாப்பிடுங்கள்.
4. தயிர் அல்லது மோர்
தயிர் அல்லது மோரில் புரோபயோடிக்குகள் அதிகம் உள்ளன. இது செரிமானத்தை மென்மையாக்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். உடலில் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வந்தாலே, பாதி சரும பிரச்சனைகள் குறையும். எனவே தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்து வாருங்கள்.
5. சிறுதானியங்கள் மற்றும் முழு தானியங்கள்
தினசரி உணவில் சிறுதானியங்கள் மற்றும் முழு தானியங்களை சேர்த்து வந்தால், அது உடலில் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும் மற்றும் நீண்ட நேரம் உடலில் ஆற்றல் நிலைத்திருக்கும். அதுவும் தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் எவ்வளவு வயதானாலும் இளமையாகவும், பொலிவான சருமத்துடன் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள 5 உணவுகளை தினசரி உணவில் தவறாமல் உட்கொண்டு வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications