Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
May 2026 Money Horoscope: மே மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மாதத்தில் கிரகங்களின் நிலைகளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கவுள்ளன. அதுவும் இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே கிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் இளவரசனான புதனும் ஒன்றிணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. அதைத் தொடர்ந்து அசுரர்களின் குருவும், செல்வத்தின் காரணியுமான சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் இருந்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படி தொழிலுக்கும், பணத்திற்கும், பேச்சுக்கும், செழிப்புக்கும் பொறுப்பான சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்றும் சிறப்பான நிலையில் இருப்பதால், இந்த மே மாதத்தில் 4 ராசிக்காரர்கள் பண மழையில் நனையவுள்ளனர். இப்போது மே மாத கிரக நிலைகளால் நிதி ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மே மாதமானது நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். அதுவும் மே 11 ஆம் தேதிக்கு பின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். எங்காவது பணம் சிக்கியிருந்தால், அந்த பணத்தை இம்மாதத்தில் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. மொத்தத்தில் நிதி ரீதியாக இம்மாதம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! மே மாதத்தில் 14 ஆம் தேதி வரை நிதி விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள். பணத்தை சேமிக்க ஒழுக்கம் அவசியம். எனவே ஒழுக்கமாக இருப்பின் நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்ப தேவைகளுக்காக நிறைய செலவுகளை செய்ய நேரிடும். ஆடம்பர பொருட்களுக்கும் அதிகமாக செலவுகளை செய்யக்கூடும். இருப்பினும் இம்மாதத்தில் பணத்திற்கு பஞ்சம் ஏதும் இருக்காது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! மே மாதமானது வருமானத்தைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும். புதிய வருமான வாய்ப்புக்கள் உருவாகும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். இருப்பினும் இம்மாதத்தில் குறுக்கு வழிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மே மாதத்தில் கடின உழைப்புக்கான நிதி ஆதாயங்களைக் காண்பீர்கள். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு பணத்தை சம்பாதிப்பீர்கள். ஏற்கனவே சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். மாத தொடக்கத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்ளுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் மாத இறுதியில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



