Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
Peanut Chutney Without Coconut Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் பெரும்பாலும் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சட்னி செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வேர்க்கடலை சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா?

இதனால் இந்த சட்னியை அடிக்கடி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரியான சுவையின் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வேர்க்கடலை சட்னியை செய்வதாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சட்னி செய்யுங்கள். இப்படி வேக்கடலை சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த சூப்பரான வேர்க்கடலை சட்னியை செய்வதற்கு தேங்காய், தக்காளி போன்ற எதுவுமே தேவையில்லை.
உங்களுக்கு தேங்காய் இல்லாத வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- புளி - ஒரு சிறிய துண்டு
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- பூண்டுப் பல் - 5
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை:
- வேர்க்கடலையை 2 நிமிடங்கள் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் உளுத்தம்பருப்பு, வர மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை மற்றும் வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.
- உளுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு அவற்றை எடுத்து ஆறவிடவும்.
- வறுத்த பொருட்கள் ஆறியதும் இதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- இதை அப்படியே சாப்பிடலாம். சட்னியை தாளிக்க விரும்பினால் ஒரு கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, சட்னியுடன் சேர்க்கவும்.
- இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி நன்கு கிளறினால் சுவையான தேங்காய், தக்காளி சேர்க்காத வேர்க்கடலை சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications