Latest Updates
-
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா? -
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும -
ஹிமாலயன் வயகரா என்று அழைக்கப்படும் இந்த காளானின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்... -
சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 04, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க..
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க
புற்றுநோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றை தடுப்பதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புற்றுநோயை தடுக்கும் செயல்முறையை உணவிலிருந்து தொடங்க வேண்டும். புற்றுநோயை எதிர்க்கும் உணவுகளில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், மீன் மற்றும் நொதிக்கவைக்கப்பட்ட உணவுகள் ஆகியவை அடங்கும்.

இந்த உணவுகளில், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் பாதுகாப்புச் சேர்மங்கள் உள்ளன. சில, ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவுகின்றன. சில உணவுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்குகின்றன அல்லது அழற்சியைத் தடுக்கின்றன. பல, ஆன்டிஆக்ஸிடன்ட்களால் ஆரோக்கியமான செல்களுக்கு ஏற்படும் சேதத்தின் அபாயத்தைக் குறைக்கின்றன. இந்த பதிவில் புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்குகள்
ஊதா சர்க்கரைவள்ளிக் கிழங்குகளில், அழற்சி மற்றும் செல் சேதத்தைக் குறைப்பதோடு தொடர்புடைய ஆன்டிஆக்ஸிடன்ட்களான ஆந்தோசயனின்கள் அதிக அளவில் உள்ளதால், புற்றுநோயைத் தடுக்கும் உணவில் இவை ஒரு சிறந்த உணவாகும். குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்க இவை உதவக்கூடும் என்று ஆய்வக ஆய்வுகள் காட்டுகின்றன.
பெர்ரிகள்
பெர்ரி வகைகளும் புற்றுநோயைத் தடுக்கும் சிறந்த உணவாகும். அவற்றில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆந்தோசயனின்கள், எல்லஜிக் அமிலம், ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது செரிமான மண்டலத்தில் புற்றுநோயைத் தடுக்க உதவும். இதன் முக்கிய சத்துக்கள் பெரும்பாலும் அவற்றின் நீலம், ஊதா மற்றும் சிவப்பு நிறமிகளில்தான் அடங்கியுள்ளது.
சிலுவைக் காய்கறிகள்
இந்த உணவுகளில் ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்ஸ் ஆகியவை அடங்கும். இதன் பெயர் லத்தீன் மொழியில் "சிலுவை தாங்கிய" என்று பொருள்படும் "க்ரூசிஃபெரே" என்பதிலிருந்து வந்தது. நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டிருந்தாலும், அவை பல ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் புற்றுநோயை எதிர்க்கும் சேர்மமான இண்டோல்-3-கார்பினோலைக் கொண்ட ஒரே உணவுகள் இவைதான். இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது பல புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
மீன்
மீனில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் புரதமும் நிறைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சூரை, சால்மன், மத்தி, மற்றும் நெத்திலியில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் மிக உயர்ந்த உணவு ஆதாரங்களில் ஒன்றான மீன், அழற்சியை எதிர்த்துப் போராடுவதோடு, மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் ஆரோக்கியமற்ற உணவு என்ற நம்பிக்கை பெரும்பாலான மக்களிடையே உள்ளது. ஆனால் அதிக கோகோ உள்ளடக்கம் கொண்ட டார்க் சாக்லேட்டை சாப்பிடுவது, சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்களை வழங்கக்கூடும். சாக்லேட், கோகோ மரத்தின் தாவர விதையான கோகோ பீனிலிருந்து வருகிறது. மேலும் இது, ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களுக்கு ஆற்றல் தரும் பாலிஃபீனால்கள் மற்றும் ஃபிளவனால்களின் சிறந்த மூலமாக உள்ளது.
புளிக்கவைக்கப்பட்ட உணவுகள்
நொதிக்கவைக்கப்பட்ட உணவுகள், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களான புரோபயாடிக்குகளை வழங்குகின்றன. இந்த நல்ல பாக்டீரியாக்கள், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் தடுக்கும் திறன் கொண்டவை. இது பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கலாம்.
பூண்டு
பூண்டு பல நூற்றாண்டுகளாக ஒரு மருத்துவப் பொருளாகவும், உணவுப்பொருளாகவும் இருந்து வருகிறது. ஒரு வேர்க்காய்கறியான பூண்டில், புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் அல்லிசின் என்ற சக்திவாய்ந்த கந்தகச் சேர்மம் உள்ளது. அடிக்கடி பூண்டு சாப்பிடுவது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது, மேலும் மற்ற புற்றுநோய்களைக் குறைப்பதில் அதன் பங்கு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நட்ஸ்
அமெரிக்கப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தின் கூற்றுப்படி, அனைத்து வகையான நட்ஸ்களும், குறிப்பாக வால்நட்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளன. நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த ஆதாரமாகத் திகழும் நட்ஸ்களை, சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


