Just In
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 3 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 8 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 9 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Movies
பிரபல பாலிவுட் நாயகியுடன் இணையும் ஜிவி பிரகாஷ்.. நடிப்பா -இசையா.. சொல்லலியே பாஸ்!
- Finance
இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இந்த வருடம் அப்ரைசல் வேற லெவல்..!
- News
மன் கி பாத் உரை.. எமர்ஜென்சி, நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ்,, பிரதமர் மோடி பேச்சு..!
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தேங்காய் துவையல்
பொதுவாக துவையலை சுடுகஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் துவையலைத் தான். இந்த தேங்காய் துவையல் செய்வது மிகவும் சுலபம். அதோடு இந்த துவையல் வெள்ளை சாதத்துடன் சேர்த்து பிரட்டி சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். சிலருக்கு தேங்காய் துவையல் சரியாக செய்யத் தெரியாது. நீங்களும் அத்தகையவர்களுள் ஒருவரானால், இக்கட்டுரை உங்களுக்கானது.
ஏனெனில் கீழே தேங்காய் துவையல் எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* புளி - 1 துண்டு
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் புளி, பெருங்காயத் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின்பு துருவிய தேங்காய் சேர்த்து ஈரப்பசை போகும் அளவில் பொன்னிறமாகுமாறு வறுத்து இறக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு, சிறிது நீர் ஊற்றி, கொரகொரவென்று அரைத்தால், தேங்காய் துவையல் தயார்.
குறிப்பு:
* வேண்டுமானால், வறுக்கும் போது ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
* துவையல் எப்போதும் சற்று கெட்டியாகவும், மென்மையாக இல்லாமல் கொரகொரவென்றும் தான் இருக்க வேண்டும். எனவே அதற்கேற்ப நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
* விருப்பமுள்ளவர்கள், துவையலை தயார் செய்த பின்னர் கடுகை தாளித்து சேர்க்கலாம்.
Image Courtesy: sharmispassions