Latest Updates
-
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க...
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Mango Face Packs: கோடைக்காலம் வந்தாலே ஒருபக்கம் வெயிலை நினைத்து பயம் ஏற்பட்டாலும், மறுபக்கம் மாம்பழத்தை நினைத்து சந்தோஷம் ஏற்படும். ஏனெனில் கோடையில் தானே நல்ல சுவையான மாம்பழத்தை சுவைக்க முடியும். உங்கள் வீட்டில் கோடைக்காலத்தில் தினமும் மாம்பழத்தை வாங்கி குவித்து சாப்பிடுவீர்களானால், அதை சற்று உங்கள் சருமத்திற்கும் பயன்படுத்தி, உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் மாம்பழம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த உதவுகின்றன.

முக்கியமாக மாம்பழத்தைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமம் நன்கு நீரேற்றத்துடன் இருக்கும். மேலும் சூரிய கதிர்களால் சரும செல்கள் சேதமடைவது தடுக்கப்பட்டு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமத்திற்கு நல்ல நிறத்தைத் தரும். மேலும் பிம்பிள், முகப்பரு போன்றவற்றைத் தடுக்கும்.
இவ்வளவு நன்மைகளை வழங்கும் மாம்பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று கேட்கலாம். மாம்பழத்தைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நன்மைகளையும் பெறலாம். இப்போது சரும அழகையும், நிறத்தையும் மேம்படுத்த உதவும் 5 மாம்பழ ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. மாம்பழம், சியா விதைகள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் மாம்பழ கூழை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் சியா விதைகளை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.
2. மாம்பழம், தேன் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் நன்கு கனிந்த மாம்பழ கூழை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகப்பரு வருவதைக் குறைக்க உதவி புரியும்.
3. மாம்பழம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பெளில் 2 டேபிள் ஸ்பூன் மாம்பழ கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. மாம்பழம் மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மாம்பழ சுழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகப்பரு சருமத்தை கொண்டவர்களுக்கும், எண்ணெய் பசை சருமத்தினருக்கும் ஏற்றது.
5. மாம்பழ மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மாம்பழ கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்த உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

