மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா?

Heart Health: உலகம் முழுவதும் அதிக மக்களின் இறப்புக்கு காரணமாக இருப்பது இதய நோய்தான், துரதிர்ஷ்டமான விஷயம் என்னவெனில், மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்கள் மாரடைப்பால் இறப்பதற்கு முக்கியக் காரணம் இதய நோய்கள் பற்றிய மூடநம்பிக்கைகளும், தவறான தகவல்களும்தான்.

Heart Health Common Myths and Facts About Heart Disease

சிலர் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாலோ, இளமையாக இருப்பதாலோ, மிகவும் ஒல்லியாக இருப்பதாலோ அல்லது எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாததாலோ தங்களுக்கு ஆபத்து இல்லை என்று நம்புகிறார்கள். இதனால், அவர்கள் சரியான நேரத்தில் நோயைக் கண்டறிய முடியாமல் போகிறது. இது அவர்களின்உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பைக் குறைக்கிறது. இந்த பதிவில் இதய நோய்களைப் பற்றி மக்களிடையே நிலவும் பொதுவான மூடநம்பிக்கைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

வயதானவர்களை மட்டுமே பாதிக்கும்

இதய நோய் வயதானவர்களை மட்டுமே தாக்கும் என்பது பொதுவான மூடநம்பிக்கையாகும், ஆனால், பெரும்பாலானோர் நினைப்பதைவிட மிக முன்னதாகவே இதய நோய் ஏற்படத் தொடங்கலாம். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், புகைபிடித்தல், உடற்பயிற்சியின்மை மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் போன்ற தவறான வாழ்க்கை முறைப் பழக்கங்கள், ஒருவரின் பதின்ம வயதிலோ அல்லது இருபதுகளிலோ இதயத்தைப் பாதிக்கத் தொடங்கிவிடக்கூடும்.

ஆண்களை மட்டுமே பாதிக்கும்

இதய நோய் என்பது பொதுவாக ஆண்களுக்குரிய ஒரு உடல்நலப் பிரச்சினையாகவே கருதப்பட்டாலும், பெண்களும் குறிப்பிட்ட அளவு இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆய்வுகளின் படி, உலகம் முழுவதும் பெண்களிடையே ஏற்படும் இறப்புகளுக்கு இதுவே முதன்மையான காரணமாக உள்ளது. இதய நோய்க்கான அறிகுறிகள் பெண்களிடத்தில் மாறுபட்டவையாக இருப்பதுடன், அவ்வளவு எளிதில் கவனிக்க முடியாதவையாகவும் இருக்கக்கூடும். இதனால்தான் இந்நோயைக் கண்டறிவதில் பெரும்பாலும் தாமதம் ஏற்படுகிறது.

Heart Health Common Myths and Facts About Heart Disease

அறிகுறிகள் இல்லையென்றால் ஆபத்து இல்லை

இதய நோய்கள் அறிகுறிகள் இல்லாமல் ஏற்படாது என்பது பொதுவான தவறான புரிதல்களில் ஒன்றாகும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற இதய நோயின் ஆரம்ப நிலைகள் நீண்ட காலத்திற்கு கவனத்திற்கு வராமலே போகக்கூடும். உண்மையில், பலரும் தங்கள்ஆரோக்கிய பிரச்சினையைப் பற்றி, அது ஆபத்தான நிலையை அடைந்த பிறகோ அல்லது மாரடைப்பு போன்ற ஒரு தீவிரமான நிகழ்வு ஏற்படும் சமயத்திலோதான் அறிந்துகொள்கிறார்கள்.

குடும்பத்தில் யாருக்கும் இல்லையென்றால் தனக்கும் இதய நோய் வராது

மரபணுக்கள் இதய ஆபத்தைப் பாதிக்கக்கூடும் என்றாலும், அவை மட்டுமே ஒரே காரணி அல்ல. உங்கள் இதய ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில், நீங்கள் வாழும் விதமே மிக முக்கியமான காரணியாகும். உங்கள் குடும்பத்தில் யாருக்கும் இதய நோய் இருந்ததில்லை என்றாலும் கூட, புகைப்பிடித்தல், தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை உங்களுக்கு இதய நோய் ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.

ஒல்லியாக இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கலாம்

உடல் பருமன் உள்ளவர்களே இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது மூடநம்பிக்கையாககும். உடல் எடை மட்டுமே இதய ஆரோக்கியத்தை அளவிடுவதற்குப் போதுமான ஒரே அளவுகோலாக இருக்காது. ஒல்லியாக இருப்பவர்களும் அதிக கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படலாம். "Skinny fat" என்று அழைக்கப்படும் இந்த நிலையானது, இதய நோய் ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கக்கூடும். எனவே, எத்தகைய உடல்வாகு கொண்டவராயினும், இதய நோயால் பாதிக்கப்படலாம்.

மார்பு வலி மட்டுமே இதய நோயின் அறிகுறி

மார்பு வலி என்பது மாரடைப்புடன் தொடர்புடைய, மிகவும் பொதுவாகக் கண்டறியப்படும் அறிகுறியாகும். இருப்பினும், இது மட்டுமே ஒரே அறிகுறி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு மார்பு வலி இல்லாமலே, மூச்சுத் திணறல், குமட்டல், சோர்வு, தலைச்சுற்றல் அல்லது தாடை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் வலி போன்ற பிற அறிகுறிகள் பெரும்பாலும் ஏற்படக்கூடும். இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது இதய நோயை தீவிரப்படுத்தலாம்.

கொழுப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

உண்மையில், அனைத்து வகையான கொழுப்புகளும் தீங்கு விளைவிப்பவை அல்ல. நட்ஸ், விதைகள், அவகேடோ மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளதைப் போன்ற, உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகள் இதயத்தைப் பாதுகாப்பதில் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்தக் கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவை நேர்மறையாகப் பாதிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றன.

இதய நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்

உடற்பயிற்சி இதய நோயை தீவிரமாக்கும் என்பது பெரும்பாலான மக்களிடமிருக்கும் நம்பிக்கையாகும், உண்மையில், மிதமான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வது இதயத்தை வலுவாக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உயர் இரத்த அழுத்தம் போன்ற சில ஆபத்துக் காரணிகளைக் குறைக்கவும் வழிவகுக்கும். இருப்பினும், மருத்துவரின் ஒப்புதல் பெற்ற ஒரு செயல் திட்டத்தையே எப்போதும் பின்பற்ற வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, April 28, 2026, 15:06 [IST]
Desktop Bottom Promotion