Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Made Vipreet Rajyog 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் ஏப்ரல் 19 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் மே 14 ஆம் தேதி வரை இருப்பார்.

இப்படி சொந்த ராசிக்குள் சுக்கிரன் நுழைந்ததால், மாளவ்ய ராஜயோகம் உருவாகியிருப்பதோடு, சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமும் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் வெற்றிகளைக் குவிப்பதோடு, வருமானத்தில் உயர்வு ஏற்படும் மற்றும் நீண்ட கால ஆசைகளும் நிறைவேறும்.
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் 1, 4, 7, 10 போன்ற கேந்திர வீடுகளில் இருக்கும் போது, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கும். அதே வேளையில் 6, 8, 12 ஆகிய வீடுகளில் இருக்கும் போது, அது விபரீத ராஜயோகத்தை உருவாக்கும். இதனால் ரிஷப ராசிக்கு சென்றுள்ள சுக்கிரனால் உருவாகியிருக்கும் விபரீத ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் வேலை, தொழில் மற்றும் வருமானத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிரிகள் பலவீனமாக இருப்பார்கள்.
சட்ட விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது பொறுப்புக்கள் வழங்கப்படலாம். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கலைத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரனால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.
நிதி நிலைமை வலுவடையும். வருமானம் அதிகரிப்பதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சுக்கிரனால் ஆளுமை மேம்படும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இனிமையாக இருக்கும். முக்கியமாக ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். நிதி நிலைமை உயரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
என்ன தான் பண வரவு சிறப்பாக இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆடம்பரத்திற்காகவும், உறவுகளுக்காகவும் நிறைய பணத்தை செலவிடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


