Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது..
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க..
Summer Special Mango Pudding Recipe In Tamil: மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது. மார்கெட்டில் பலவிதமான இனிப்பான மாம்பழங்கள் விற்கப்படுவதைக் காணலாம். இந்த மாம்பழங்களை வெறுமனே சாப்பிடாமல், அதைக் கொண்டு சற்று வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாருங்கள். இதனால் மாம்பழத்தை சுவைத்த மாதிரியும் இருக்கும், வித்தியாசமான ரெசிபிக்களை ட்ரை செய்தது போன்றும் இருக்கும் அல்லவா?

அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு புட்டிங் என்றால் ரொம்ப பிடிக்குமானால், மாம்பழத்தைக் கொண்டே அருமையான சுவையில் புட்டிங் செய்யலாம். முக்கியமாக இந்த புட்டிங்கை செய்ய வெறும் 4 பொருட்கள் இருந்தாலே போதும். டக்கென்று செய்துவிடலாம். ஒருமுறை இந்த மாம்பழ புட்டிங்கை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.
இந்த மாம்பழ புட்டிங் குறித்து அபி என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு மாம்பழ புட்டிங்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ புட்டிங் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாம்பழம் - 1 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1 கப் + 1/2 கப்
* சோள மாவு - 1/4 கப்
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
* முதலில் நன்கு கனிந்த மற்றும் இனிப்பான ஒரு மாம்பழத்தை எடுத்து,
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு கப் அளவு மாம்பழத்
துண்டுகளை எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த மாம்பழத்தை
ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* அதற்குள் ஒரு கிண்ணத்தில் 1/4 கப் சோள மாவை எடுத்து, அத்துடன் 1/2
கப் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* மாம்பழ கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதை கைவிடாமல் தொடர்ந்து
கிளறிக் கொண்டே கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி, கெட்டியாகும் வரை
நன்கு கிளறி விட வேண்டும்.
* கலவையானது கெட்டியாகத் தொடங்கியதும், அதை இறக்கி, பாதி
எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் எதில் புட்டிங்கை செட் செய்யப் போகிறீர்களோ, அந்த கிண்ணம்
அல்லது டம்ளரை எடுத்து, அதில் தேங்காய் எண்ணெயை தடவி, தயாரித்து
வைத்துள்ள புட்டிங் கலவையை ஊற்றி, அந்த டம்ளரை அல்லது கிண்ணத்தை
ஒருமுறை தட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு நன்கு குளிர்ந்த பின், அதை ப்ரீசரில் வைக்காமல்,
ஃப்ரிட்ஜ்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுத்தால், மாம்பழ புட்டிங்
தயார்.



Click it and Unblock the Notifications