Latest Updates
-
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம்
10 பிஸ்கட் இருந்தா ஈவ்னிங் இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பாராட்டு மழையில நனைவீங்க...
Biscuit Pudding Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்வீட் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு ஸ்பெஷலாக ஏதாவது ஒரு ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிஸ்கட் உள்ளதா? அப்படியானால் அந்த பிஸ்கட்டைக் கொண்டு புட்டிங் செய்யுங்கள்.
இந்த பிஸ்கட் புட்டிங் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். மேலும் இது டக்கென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். முக்கியமாக இதை குழந்தைகளுக்கு ஒருமுறை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு பிஸ்கட் புட்டிங்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிஸ்கட் புட்டிங் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* பிஸ்கட் - 10
* சர்க்கரை - 1/4 கப்
* ஏலக்காய் - 4
* முட்டை - 2
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* காய்ச்சிய கெட்டி பால் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரையை போட்டு, அத்துடன்
1/4 கப் நீரை ஊற்றி தேன் நிறத்தில் வரும் வரை கருக விடாமல் காய்ச்சி
இறக்க வேண்டும்.
* பின் அதை கேக் ட்ரேயில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பிஸ்ட், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள பிஸ்கட் பொடியை சலித்து சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, காய்ச்சிய கெட்டி
பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கேக் ட்ரேயில் உள்ள கேரமல் மேல் ஊற்றிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதனுள்
ஸ்டாண்ட்டை வைத்து, அதன் மேல் கேக் ட்ரேயை வைத்து, தட்டு கொண்டு மூடி
வைத்து, குறைவான தீயில் வைத்து 30 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர
வைக்க வேண்டும்.
* நன்கு குளிர்ந்த பின் ஓரங்களை கத்தி கொண்டு கீறி விட்டு, ஒரு
தட்டில் கவிழ்த்தினால், சுவையான பிஸ்கட் புட்டிங் தயார்.



Click it and Unblock the Notifications
