Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
Nellai Murungakkai Puli Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் ஒரு நாள் நெல்லை ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். ஏனெனில் திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டுமல்ல சுவையான உணவுகளுக்கும் பெயர் பெற்றது. வித்தியாசமான புளி குழம்பு வைக்க விரும்புனா இந்த தேங்காய் சேர்க்காத இந்த திருநெல்வேலி ஸ்டைல் முருங்கைக்காய் புளி குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளி குழம்பு செய்வது மிகவும் எளிதானது, ஏனெனில் முருங்கைக்காய் என்பது பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு காயாகும். இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. இந்த நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
உங்களுக்கு நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முருங்கைக்காய் - 2
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- வெல்லம் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
- சின்ன வெங்காயம் - 10 பொடியாக நறுக்கியது
- பூண்டு பல் - 10
- பொடியாக நறுக்கிய பூண்டு - 5
செய்முறை:
- முருங்கைக்காயைக் கழுவி, சின்ன சின்னத் துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- புளியை ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, 1 கப் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், உளுந்தம்பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பல் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் முருங்கைக்காயைச் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் புளிக்கரைசல், சாம்பார் தூள், மஞ்சள் தூள், வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- குழம்பு கொதிக்கத் தொடங்கியதும் அரிசி மாவைச் சிறிதளவு நீரில் கரைத்து, குழம்புடன் சேர்க்கவும். அனைத்தையும் அதிகத் தீயில் வைத்து, 2 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
- ஆவி முழுமையாக வெளியேறிய பிறகு குக்கரைத் திறக்கவும். சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்தால் சுவையான நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெடி!
-



Click it and Unblock the Notifications
