Latest Updates
-
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்! -
சூப்பரான செட்டிநாடு பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 17 முதல் சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களை சோதிக்க போகிறார்! ரெடியா இருங்க -
வாஸ்துப்படி, நைட் தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்யுங்க.. செல்வம் பெருகும்! -
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்! -
வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப நடிகை வைஷ்ணவியின் ஃபேஸ் பேக்கை போடுங்க!
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க!
Andhra Style Raw Mango Rasam Recipe In Tamil: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மார்கெட்டில் மாங்காய் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த மாங்காயைக் கொண்டு ஏராளமான ரெசிபிக்களை செய்யலாம். அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? அடிக்கடி வித்தியாசமான சுவையுடைய ரசம் ரெசிபிக்களை செய்து கொடுக்க கேட்பார்களா?
அப்படியானால் ஒருமுறை மாங்காய் கொண்டு ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசத்தை செய்து கொடுங்கள். இந்த ரசம் மாங்காய் சுட்டு செய்வதால், அந்த ஸ்மோக்கி ப்ளேவருடன் ரசம் மிகவும் பிரமாதமாக இருக்கும். ஒருமுறை இந்த ரசத்தை செய்து கொடுத்தால், பின் கோடை முழுவதும் அடிக்கடி இந்த ரசத்தை செய்து கொடுக்க கேட்பார்கள்.

இந்த சுட்ட பச்சை மாங்காய் ரசத்தை தெலுங்கில் மாமிடிகாய பச்சை புளுசு என்று அழைப்பர். இந்த மாமிடிகாய பச்சை புளுசு ரெசிபியை எப்படி செய்வதென்று குக்வித்ஷிவாங்கி என்னும் இன்ஸ்டா தளத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெசிபியின் எளிய செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மாங்காய் - 2
* பச்சை மிளகாய் - 2-3
* வரமிளகாய் - 2
* பூண்டு - 3-4 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* வெல்லம் - 1-2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1- டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1-2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் பச்சை மாங்காய், பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாயை
நெருப்பில் நன்கு சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சுட்ட பொருட்களை நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு இடி உரலில் சீரகம், பூண்டு, சுட்டு எடுத்த பச்சை மிளகாய்
மற்றும் வரமிளகாயை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு சுட்ட பச்சை மாங்காயின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* அதன் பின் சுட்ட மாங்காயின் தசைப்பகுதியை ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொண்டு, கைகளால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இடித்து வைத்துள்ள பூண்டு பச்சை மிளகாய் விழுதை
சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க
வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு, வெல்லம் மற்றும் தேவையான அளவு
நீரை ஊற்ற வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எணணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து கலந்தால், சுவையான ஆந்திரா
ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











