Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கோலாப்பூரி மிளகாய் தேச்சா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமயா இருக்கும்
Kolhapuri Chilli Thecha Chutney in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது காரசாரமான சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நார்த் இந்தியன் ஸ்டைல் சைடிஷ்களை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் சுவையான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் கோலாப்பூரி மிளகாய் சட்னியான மிளகாய் தேச்சாவை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.
இந்த சட்னி வழக்கமான மிளகாய் சட்னி போல அல்லாமல் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு மிகவும் சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து விட்டால், அதன்பிறகு அடிக்கடி செய்யத் தொடங்கி விடுவீர்கள். இந்த சட்னியை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கூட வைத்து சாப்பிடலாம். இது இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றுக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.

உங்களுக்கு கோலாப்பூரி மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோலாப்பூரி மிளகாய் தேச்சாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 15 வர மிளகாய்
- 10 பூண்டு பல்
- ¼ கப் வேர்க்கடலை
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் 15 வர மிளகாய், 10 பல் பூண்டு மற்றும் ¼ கப் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
- மிளகாய் பாதி வேகும் வரை, மிதமான தீயில் வறுக்கவும்.
- பின்னர் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து, நன்றாக வறுக்கவும்.
- கடாயை மூடி வைத்து, வர மிளகாய் முழுமையாக மென்மையாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
- இந்த கலவை முழுமையாக ஆறியதும், உரலில் போடவும். சட்னியாக மாறும் வரை மெதுவாக நசுக்கவும்.
- பின்னார் ½ ஸ்பூன் உப்பு மற்றும் 2 ஸ்பூன் கொத்தமல்லியைச் சேர்த்து லேசாக நசுக்கவும்.
- அனைத்தும் நன்றாகக் கலந்த பிறகு, இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒருவேளை உங்களிடம் உரல் இல்லையென்றால் மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கோலாப்பூரி மிளகாய் தேச்சா ரெடி. இதை இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications