Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க
Summer Special Vellarikai Kootu Recipe in Tamil: பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு சைடிஷாக ஏதாவது ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்து விடுவோம். அதேசமயம் என்ன காய்கறியை பொரியல் செய்வது என்பது அடுத்த கவலையாகும். சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு பொதுவாக பொரியல்தான் சைடிஷாக செய்வார்கள், ஆனால் பொரியல் போலவே சாதத்துக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும் மற்றொரு ஐட்டம் என்றால் அது கூட்டுதான்.
பொதுவாக கூட்டு என்பது பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் புடலங்காயை வைத்துதான் செய்வார்கள், ஆனால் உண்மையில் சில வித்தியாசமான காய்கறிகளை வைத்து கூட்டு செய்யலாம். அப்படி ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான காய்தான் வெள்ளரிக்காய். வெயில் காலம் தொடங்கியிருக்கும் சூழலில் இப்படி வெள்ளரிக்காயை வைத்து கூட்டு செய்வது சுவையாக இருப்பதுடன் உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.

உங்களுக்கு வெயில் காலத்தை சமாளிக்க உதவும் வெள்ளரிக்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
குக்கரில் வேகவைக்க:
- ¼ கோப்பை பாசிப்பருப்பு
- 1 கப் தண்ணீர்
- 150 கிராம் நறுக்கிய வெள்ளரிக்காய்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- அரை ஸ்பூன் நல்லெண்ணெய்
அரைக்க:
- ¼ கப் தேங்காய்
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 பச்சை மிளகாய்
- சிறிதளவு தண்ணீர்
கூட்டு செய்ய:
- தேவையான அளவு தண்ணீர்
- 2 கொத்து கறிவேப்பிலை
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
- தேவையான அளவு உப்பு
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- இடித்த மிளகு - அரை ஸ்பூன்
தாளிக்க:
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் இஞ்சிப் பொடி
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ½ ஸ்பூன் பெருங்காயம்
செய்முறை:
- முதலில் பாசிப்பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- பின் நறுக்கிய வெள்ளரிக்காய், பருப்பு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒரு பிரஷர் குக்கரில் சேர்க்கவும்.
- 5 விசில் வரும் வரை வேகவைத்து, பிரஷர் தானாக வெளியேற விடவும்.
- அதேசமயம் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- பிரஷர் வெளியேறியதும் வேகவைத்த பருப்பை நன்கு கலந்து மசித்து வைத்துக்கொள்ளவும்.
- அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுது, தண்ணீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு கலக்கவும்.
- மேலும், நசுக்கிய மிளகைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கூட்டு விரும்பிய பக்குவத்திற்கு வரும்வரை கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அடுப்பை மிதமான நெருப்பில் வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும், கடுகு மற்றும் உளுத்தம்பருப்பைச் சேர்த்துப் பொரியவிடவும்.
- மேலும், பெருங்காயம் மற்றும் இஞ்சிப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான வெள்ளரிக்காய் கூட்டு தயார்



Click it and Unblock the Notifications
