For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் பருமன் பிரச்சனையிலிருந்து உங்க குழந்தையை காப்பாற்ற நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

ஆரம்பகால குழந்தை பருவ ஊட்டச்சத்து என்பது மிக முக்கியமானது. சிறு வயதில் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கப்படுகிறதோ அதையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவார்கள்

|

உடல் பருமன் என்னும் பிரச்சனை நவீன காலத்தில் எங்கும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் வெகுவாக அதற்கான மருந்துகளை எடுத்து உடனடி தீர்வு பெற அலைகிறார்கள். இது வரை பெரியவர்களுக்கு மட்டுமே பிரச்சனையாக இருந்த உடல் பருமன் இப்போது குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Excellent Ways To Save Your Kid From Child Obesity in tamil

குழந்தைகள் அவர்களின் வயதிற்கேற்ற எடையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அவர்களின் எடை மிக அதிகமாக இருக்கும் போது, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை குழந்தைக்கு ஏற்படுத்தும். அவற்றை தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை உடல் பருமன்: ஆரோக்கிய கேட்டின் ஆரம்பம்

குழந்தை உடல் பருமன்: ஆரோக்கிய கேட்டின் ஆரம்பம்

மோசமான உணவு முறையின் விளைவாக குழந்தைகளில் உடல் பருமன் மிகவும் பொதுவான ஒன்றாகி வருகிறது. ஆனால் உடல் பருமன் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கும் வளர்த்துக்கொள்வதற்கும் சில எளிய வழிமுறைகள் குழந்தைகளுக்கு உதவுகின்றன. இதனால் அவர்கள் சுறுசுறுப்புடனும், நம்பிக்கையுடனும் செய்யும் செயல்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான எடையை கட்டுக்குள் வைத்து அழகான தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. இது குழந்தைகளை டயட்டில் வைப்பது போன்றது அல்ல. கலோரிக் கட்டுப்பாடு என்ற பெயரில் உணவுகளை "நல்லது" அல்லது "கெட்டது" என வகைப்படுத்துவதும் குழந்தைகளுக்கு வெறுப்பையும் ஏமாற்றத்தையும் கொடுக்கும். மாறாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சத்தான உணவுகளை தேர்வு செய்வது எப்படி என்பதை போன்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்த்தல்

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்த்தல்

ஆரம்பகால குழந்தை பருவ ஊட்டச்சத்து என்பது மிக முக்கியமானது. சிறு வயதில் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கப்படுகிறதோ அதையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவார்கள். நீங்கள் ஆரோக்கியான உணவு முறையை பின்பற்றினால் அவர்களும் ஆரோக்கியமாக சாப்பிட வாய்ப்புகள் அதிகம். உங்கள் வீட்டில் நொறுக்கு தீனிகளுக்கு மாற்றாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ், நட்ஸ், இறைச்சிகள் மற்றும் குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பால் பொருட்கள் போன்ற சத்தான உணவுகளை வாங்கி வையுங்கள். உங்கள் குழந்தையை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு பழங்கள் மற்றும் ஒவ்வொரு உணவின் போதும் ஏதேனும் ஒரு பச்சை காய்கறி சாப்பிடுவதை தினசரி பழக்கமாக்குங்கள்.

போதுமான அளவு தண்ணீர்

போதுமான அளவு தண்ணீர்

மனித உடலுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. குழந்தையின் தினசரி வழக்கத்தில் இதை இணைக்க, பெற்றோர்கள் அவர்களுக்குபிடித்தமான வடிவில் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து, நாள் முழுவதும் முழு பாட்டிலையும் நான்கு முறை (தண்ணீர் பாட்டிலின் திறனைப் பொறுத்து) காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தலாம். இது அவர்களை ஒரு வழக்கத்திற்கு கொண்டு வரும், ஆனால் அவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அதை கடைபிடிக்க நேரம் எடுக்கும் மற்றும் உங்கள் குழந்தையால் ஆரம்பத்தில் முழு பாட்டிலையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் குடிக்க முடியாது.

நன்றாக தூக்க பழக்கத்தை ஏற்படுத்துதல்

நன்றாக தூக்க பழக்கத்தை ஏற்படுத்துதல்

தூக்கமின்மை குழந்தையின் எடையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லாத போது, உங்கள் பசி ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகிறது. இது அதீத பசிக்கு வழிவகுக்கிறது. மேலும், உங்கள் குழந்தை சோர்வாக இருக்கும் போது, அவர்கள் ஓடி ஆடி விளையாடுவது போன்ற உடல் செயல்பாடுகளில் ஆர்வமாக இருப்பதில்லை. குழந்தைகள், அவர்களின் வயதிற்கு ஏற்ப, தினமும் இரவில் 8 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு உறங்கும் நேரம் என்பதை திட்டமிட்டு கொடுங்கள். அவர்களின் அறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இல்லாமலும் வைத்திருங்கள், அவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்க தேவையானவற்றை செய்து கொடுங்கள்.

உடற்பயிற்சியை தினசரி பழக்கமாக்குங்கள்

உடற்பயிற்சியை தினசரி பழக்கமாக்குங்கள்

உங்கள் குழந்தையின் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியையும் சேர்த்து செய்ய சொல்லுங்கள். குழந்தைகளுக்கான எளிய உடற்பயிற்சியான குதிப்பது, ஓடுவது போன்ற அவர்களுக்கு பிடித்தவற்றை செய்ய வைக்கலாம். உடற்பயிற்சி உங்கள் குழந்தைக்கு வலுவான எலும்புகளை உருவாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், உடல் பருமனை தடுக்கவும் உதவும். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இயற்கையாகவே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளை தவறாமல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள், முடிந்தவரை வெளியில் விளையாடுவதை ஊக்குவிக்கவும்," என ஊட்டச்சத்து நிபுணர், நீரிழிவு கல்வியாளர் & பிசியோதெரபிஸ்ட் டாக்டர் அர்ச்சனா பாத்ரா ஆலோசனை கூறுகிறார்.

அளவாக ஆரோக்கியமாக சாப்பிடுவது பற்றி கற்றுக் கொடுங்கள்

அளவாக ஆரோக்கியமாக சாப்பிடுவது பற்றி கற்றுக் கொடுங்கள்

குழந்தைகள் பசி என்றவுடன், பெற்றோர்கள் அவர்களுக்கு அதிகமாக உணவு கொடுக்கிறார்கள், அதுவும் தவறானது. உணவை பகுதிகளாக பிரித்து உண்ணுதல் என்பது குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய மற்றொரு பழக்கம், ஏனெனில் அது அவர்களின் வாழ்நாள் நடைமுறையாக மாற கூடியது. உங்கள் குழந்தை மூன்று வேளைகளில் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்வதை விட குறிப்பிட்ட இடைவேளையில் குறைவான அளவில் சாப்பிடுவதை பழக்கப்படுத்துவதன் மூலம் தொடங்கலாம். இது அவர்களை அதிக நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கும், அதிகமாக சாப்பிடுவதையோ அல்லது குறைந்த இடைவெளியில் அதிகமாக சாப்பிடுவதையோ தடுக்கிறது. அவர்களின் உணவு பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்களுக்கு விருப்பமான பழத்துண்டுகள் அல்லது எண்ணெய் இல்லாமல் செய்யப்பட்ட பாப்கார்ன் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டி அவர்களுக்கு கொடுக்கலாம். சிப்ஸ் மற்றும் குக்கீகள் போன்ற தின்பண்டங்களை சாப்பிட்டு அவர்கள் உணவைத் தவிர்ப்பதை அனுமதிக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Excellent Ways To Save Your Kid From Child Obesity in tamil

Here we are talking about the Excellent Ways To Save Your Kid From Child Obesity in tamil.
Story first published: Thursday, October 27, 2022, 18:30 [IST]
Desktop Bottom Promotion