உங்க மனைவிக்கு உடலுறவில் முழுமையான சுகம் கிடைக்காமல் போக இது தான் காரணம்!

Posted By: Dinesh
Subscribe to Boldsky

திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும், அரவணைப்பும் தான். இதனை போலவே முக்கியமான ஒன்று தான் உடலுறவும்.. இந்த உடலுறவு என்பது வெறும் உடல் சார்ந்தது என்ற கருத்து முற்றிலும் தவறானது. உடலுறவு உடல் மற்றும் மனம் இரண்டையும் சார்ந்ததாகும். உடலுறவில் முழுமையாக ஈடுபட மனதில் காதல், மகிழ்ச்சி, அன்பு என அனைத்தும் தேவை..

காதலின் வெளிப்பாடு தான் காமம். பெண்களை பொருத்தவரையில், உடலுறவில் மனதின் பங்கு அதிகமாக உள்ளது. இவர்கள் உடலுறவில் முழுமையாக ஈடுபடாமல் போக சில மன வருத்தங்கள், கவலைகள் போன்றவை காரணமாகலாம். அமெரிக்க மெடிக்கல் கௌன்சில் நடத்திய ஆய்வில் 1749 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 43% பெண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை, அதாவது உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் முழுமையான இன்பம் காண முடியால் போனதாக ஆய்வு முடிவு தெரிவித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதிப்பு

பாதிப்பு

பெண்களுக்கு உடலுறவில் முழு இன்பம் கிடைக்காமல் போவது என்பது, அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களது மீது உள்ள நம்பிக்கையும் போய்விடுகிறது.

உடலுறவு

உடலுறவு

பெண்களை பொருத்தவரையில் உடலுறவு என்பது மனம் மற்றும் உடல் உறுப்புகள் சார்ந்ததாகும். உடலுறவு எண்ணங்களை தூண்டுவதை படிப்படியாக செய்ய வேண்டியது அவசியம். அப்போது தான் பெண்களுக்கு உடலுறவின் போது மன அழுத்தமும், வலியும் இல்லாமல் இருக்கும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

உடலுறவின் போது பெண்களின் உணர்வுகளை தூண்ட வேண்டியது அவசியம். உடலுறவுக்கு முன் விளையாட்டுகள் பெண்களின் உணர்வுகளை தூண்ட உதவுகிறது. இதனால் பெண்ணுறுப்புகள் இரப்பதமாகின்றன.

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

பெண்ணுறுப்பில் உள்ள உதடுகளை தூண்டுவதன் மூலமாக, தசைப்பகுதிகள் இலகுவாகின்றன. இதனால் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது வலி இல்லாமல் இருக்கும்.

உச்சநிலை

உச்சநிலை

உச்சநிலை என்பது உடலுறவின் உச்சகட்ட இன்பம் எனப்படுகிறது. இது கர்ப்பப்பை மற்றும் பெண்ணுறுப்பில் தொடுதல் உண்டாவதால் இந்த இன்பநிலை உண்டாகிறது.

திரும்புதல்

திரும்புதல்

இது உடல் மட்டும் மனது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புதல் ஆகும். இது தான் உடலுறவின் கடைசி நிலையாகும். இதன் பின்னர் உடலுறவுக்கு பின் விளையாட்டுகளை செய்வதன் மூலமாக பெண்களின் அசதி போகின்றனது. உங்கள் மீதான அன்பும் கூடும்.

இன்பம்

இன்பம்

எதிர்பார்ப்பு மற்றும் உடலுறவு உணர்வு என்பது ஒவ்வொரு படிநிலைகளிலும் இருக்கின்றனது. இதனால் ஒரு பெண்ணும் அவருடைய துணையும் இன்பமடைகின்றனர். இறுதியில் உடலுறவில் உச்சமடைகின்றனர்.

பெண் மலட்டுத்தன்மை

பெண் மலட்டுத்தன்மை

பெண் மலட்டுத்தன்மை என்பது ஒரு உடலுறவு ரீதியான பிரச்சனையாகும். இது உடலுறவின் எந்த ஒரு படிநிலையிலும் உண்டாகலாம்.

இது பெண்களுக்கு எப்படி

இது பெண்களுக்கு எப்படி

ஆண்களுக்கு காமம் என்பது உடலுறவு சார்ந்த படங்களை காணும் போதோ அல்லது அதை பற்றி பேசும் போதோ உண்டாகும். ஆனால் பெண்களுக்கு அவ்வாறு இல்லை உடலுறவு சார்ந்த விஷயங்கள், அதாவது உடலுறவுக்கு முன்விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடும் போது தான் இந்த உணர்வு உண்டாகும். எனவே ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே உடலுறவு சார்ந்த உணர்வுகள் வேறுபடுகின்றன.

விரும்பம் இன்மை

விரும்பம் இன்மை

பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னரே உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும் கூட, காதல் விளையாட்டுகளில் ஈடுபடும் போது பெண்களுக்கு இந்த உணர்வுகள் அதிகரிக்கின்றன. பெண்களுக்கும் காம உணர்வு வந்த உடன் உடலுறவில் ஈடுபடுவதே சிறந்ததாகும்.

உச்சநிலை

உச்சநிலை

ஆண்கள், மற்றும் பெண்களுக்கு இருக்கும் உச்சநிலையிலும் வேறுபாடு உள்ளது. உடலுறவின் போது உச்சநிலை அடைவதிலும் வேறுபாடுகள் உள்ளது. அதாவது பெண்களுக்கு ஒரு சில சமயங்களில் உடலுறவில் உச்சநிலை காண இயலாமல் போகின்றது. ஆனால் ஆண்கள் ஒவ்வொரு முறையும் உச்சநிலையடைகின்றனர். பெண்கள் உச்சநிலையடையாமல் போக அவர்களுக்கு இருக்கும் உணர்வு சார்ந்த பிணைப்பு தான். உணர்வு பூர்வமாக இணைய வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.

உளவியல் பிரச்சனைகள்

உளவியல் பிரச்சனைகள்

பெண்களுக்கு திருமணம் அல்லது உறவுகள் ரீதியான பிரச்சனைகள் மூலமாக மன அழுத்தம் வரலாம். அல்லது வெளியுலக நட்புகள், வேலைச்சுமை, பாதுகாப்பின்மை, கூச்சம், குற்ற உணர்ச்சி போன்றவற்றினால் பெண்களின் மனம் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போகலாம்.

உடல் ரீதியான பிரச்சனைகள்

உடல் ரீதியான பிரச்சனைகள்

சிலவகையான உடல் ரீதியான பிரச்சனைகளும் பெண்களுக்கு காம உணர்ச்சி வராமல் போவதற்கு காரணமாக உள்ளது. இருதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், ஹார்மோன் பிரச்சனைகள், நரம்பியல் பிரச்சனைகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கல்லீரல் கோளாறுகள் ஆகியவையும், மது போன்ற போதைக்கு அடிமையாவது, சிலவகையான மருந்துகளை உட்க்கொள்வது போன்றவையும் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கு காரணமாகின்றன.

வலிகள்

வலிகள்

பெண்ணுறுப்பில் ஈரப்பதம் இல்லாமல் உடலுறவு கொண்டால், பெண்களுக்கு உடலுறவின் போது வலி உண்டாகும். இதனால் பெண்கள் உடலுறவின் மீது ஈடுபாடு இல்லாமல் போகலாம். மேலும் கருப்பை கட்டிகள், அறுவை சிகிச்சை வலிகள் போன்றவையும் கூட உடலுறவின் போது அசாதாரண வலியை உண்டாக்கலாம்.

உடல் பிரச்சனைகள்

உடல் பிரச்சனைகள்

பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கட்டாயம் உள்ளது. உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி சிகிச்சை மற்றும் மருந்துகளை உட்க்கொள்வதன் மூலமாக இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மன பிரச்சனைகள்

மன பிரச்சனைகள்

மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மனநல மருத்துவரை அணுகுவதன் மூலமாகவும், முறையான மருத்துவர் ஆலோசனைப்படி நடந்து கொள்வதன் மூலமாகவும் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

female impotence reasons and treatments

female impotence reasons and treatments