Just In
- 29 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 10 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 11 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
- 13 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அளவுக்கதிகமா கொலஸ்ட்ரால் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
Don't Miss
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் எதிர்பார்க்கும் மிகவும் விரும்பும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி அமெரிக்காவின் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் இருக்கும் டைலர் பெர்ரி ஸ்டுடியஸில் நடைபெற்றது. மிஸ் யுனிவர்ஸ் 2019 அழகு போட்டியின் கடைசி போட்டி டிசம்பர் 8 நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல போட்டியாளர்கள் ஒரே மேடையில் வந்து தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கள் திறமையைக் காட்டினர்.
இதில், உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான தொழில் அதிபர்கள் மற்றும் மாடல் அழகிகள் கலந்து கொண்டனர். ஆனால், இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக ஸ்வெ ஜின் ஹெட்டெட் இதில் கலந்து கொண்டார். தன்பாலின ஈர்ப்பாளரான அவர், துணிச்சலாக இந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் போட்டியாளரானார்.

எல்.ஜி.பி.டி.க்யூ சட்டவிரோதமானது
பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மரில் எல்.ஜி.பி.டி.க்யூ உறவுகள் சட்டவிரோதமாகக் கருதப்படுவதோடு ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதும் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று அமெரிக்காவில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் மேடையில் மியான்மரில் எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆபத்தான நிலையை குறித்து மிகவும் துணிச்சலாக பேசினார் ஹெட்டேட்.
MOST READ: சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?.. கண்டிப்பா படிங்க...!

போராட்டம்
பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று இந்தியாவில் கூறப்பட்ட பிறகு, அதேப்போல தங்கள் நாட்டிலும் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மியான்மரில் உள்ள எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓரினச் சேர்க்கையாளரான ஹெட்டேட்
21 வயதான மிஸ் யுனிவர்ஸ் மியான்மர், பீப்பிள் என்ற பத்திரிகைக்கு பேட்டி தரும் போது, தனது பாலியல் நோக்குநிலையை ஏற்றுக்கொண்டார். "நான் ஒரு லெஸ்பியன் என்று சொன்னால், அது பர்மாவில் உள்ள எல்ஜிபிடிக்யூ சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்." என்று அவர் கூறினார். மேலும், எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அவர் பேசினார்.

பாகுபாடு காட்டப்படுகிறது
இதில், மிகவும் கடினமான விஷயம் என்னவென்றால், பர்மாவில், எல்.ஜி.பி.டி.க்யூ மக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் மற்றவர்களாலும், குடும்பத்தினராலும் இழிவுபடுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள்.
MOST READ: திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?

குடும்ப எதிர்ப்பு
கடந்த மூன்று ஆண்டுகளாக பர்மிய பாடகரான கே கேவுடன் ஹெட்டெட் ஒரு உறவில் இருக்கிறார். அவளுடைய வாழ்க்கை ஒரு முழுமையான மகிழ்ச்சியான பாதை என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறு. ஹெட்டேட் சமுதாயத்திலிருந்து மட்டுமல்ல, தனது குடும்பத்தினரிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார்.
இதுப்போன்ற ஒரு கடினமான பாதைகள் தன் வாழ்வில் ஏராளமாக எதிர்கொண்டதாக அவர் கூறினார். முதலில் ஹெட்டேட்டை ஏற்காத குடும்பம், எல்ஜிபிடிக்யூ சமூகத்தைப் பற்றி அறிந்ததும், அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்.

குவிந்த பாராட்டுக்கள்
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் தலைவரான பவுலா ஷுகார்ட் ஹெட்டெட்டை பாராட்டினார். ஷுகார்ட் மக்களிடம், "மிஸ் யுனிவர்ஸ் மியான்மர் போன்ற வலுவான, உத்வேகம் தரும் பெண்களுக்கு ஒரு மேடை வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், அவர்கள் தங்கள் தனித்துவமான கதைகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள தைரியமாக உள்ளனர். தங்களைப் பற்றி பெருமிதம் கொள்ளும் பெண்களைப் பற்றி மிஸ் யுனிவர்ஸ் எப்போதும் பெருமைப்படும்." என்று கூறினார்.

சூப்பர் மேன்
ஹெட்டின் ரசிகர் அவளுக்கு "சூப்பர்மேன்" என்று செல்லப்பெயர் சூட்டினார். எல்ஜிபிடிக்யூ சமூகத்திற்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஹெட்டேட் விரும்புகிறார். மேலும், எல்ஜிபிடிக்யூ எதிர்ப்பு மனப்பான்மை மற்றும் எல்ஜிபிடிக்யூ சமூகத்தை நோக்கிய மக்களின் மனநிலையையும் அவர் மாற்ற விரும்புகிறார்.
MOST READ: உங்கள் துணையுடன் நீங்கள் இதை செய்தால் உங்களுக்குள் பிரிவே ஏற்படாது...!

லெஸ்பியானாக உணர்ந்தேன்
15-16 வயதாக இருந்தபோது, தனது முதல் பாலின ஈர்ப்பை உணர்ந்ததாக ஹெட்டேட் கூறினார். இருப்பினும், தான் ஏன் தன்பாலின ஈர்ப்பில் இருக்கிறோம் என்று நிறைய குழப்பமடைந்து சிரமப்பட்டார். பின்னர் "ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நான் ஒரு லெஸ்பியன் என்பதை உணர்ந்தேன், அதை ஏற்றுக்கொண்டேன்" என்று ஹெட்டேட் கூறினார்.

பெண்களை நேசிப்பவர்
இந்த ஏற்பு காரணமாக, தனது பாலியல் நோக்குநிலையை தனது பெற்றோருக்கு முன்பாக ஒப்புக் கொள்ளும் தைரியத்தை பெற்றார் ஹெட்டேட். மேலும், இவருடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு அவர் பெண்களை நேசிக்கிறார் என்பது தெரியும். ஆனால், "இது பற்றி நிறைய பேருக்கு தெரியாது," என்று அவர் மக்களிடம் கூறினார்.

மரியாதை செலுத்துகிறோம்
2018 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் முதல் திருநங்கை போட்டியாளரான ஏஞ்சலினா போன்ஸை இந்த மேடை கண்டது. அதன்பின், நடப்பாண்டில் ஹெட்டேட். பெண்கள் வலுவாக நிற்பதற்கும் அவர்களின் அடையாளத்தை மாற்றாமல் இருப்பதற்கும் மிஸ் யுனிவர்ஸ் மரியாதை செலுத்துக்கிறோம். ஏனென்றால் அவர்கள் யார் என்பதை ஏற்றுக்கொள்வதில் சமூகம் சிக்கல் அடைந்துள்ளது.
எல்.ஜி.பி.டி.க்யூ, திருநங்கைகள் ஆகியவர்களும் சக மனிதர்களே, அவர்களை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளா விட்டாலும், இழிவாக நடத்தவேண்டாம். அவர்களுடைய காதலுக்கும், உணர்வுகளுக்கும் இந்த சமூகம் மதிப்புக் கொடுக்க வேண்டும்.