For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் சதுர்த்தியில் இந்த 6 கிரகங்களின் சிறப்பு சேர்க்கையால் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் நீங்க போகுதாம்...

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியானது 6 கிரகங்களின் ஜோதிட கலவையாகும். கிரகங்களில் இந்த சுப சேர்க்கை மூலம் விநாயகர் பக்தர்களின் அனைத்து பிரச்சனைகளையும் நீக்குவார் என்று நம்பப்படுகிறது.

|

இந்து நாட்காட்டியின் படி, விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதத்தில் வரும் சுக்லபக்ஷ சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் விநாயகர் பிறந்தார். சனாதன தர்மத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பான முக்கியத்துவம் உண்டு. இந்நாளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வாங்கி வழிபடப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 19 ஆம் தேதி அனந்த சதுர்த்தசி அன்று, விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தப்படும். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியானது 6 கிரகங்களின் ஜோதிட கலவையாகும். கிரகங்களில் இந்த சுப சேர்க்கை மூலம் விநாயகர் பக்தர்களின் அனைத்து பிரச்சனைகளையும் நீக்குவார் என்று நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரகங்களின் சேர்க்கை

கிரகங்களின் சேர்க்கை

செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியின் 6 கிரகங்களின் சிறப்பான சேர்க்கை நடைபெறுகிறது. இந்த முறை புதன் கன்னி ராசியிலும், துலாம் ராசியில் சுக்கிரனும், ரிஷபத்தின் ராகுவும், மகரத்தில் சனியும், விருச்சிகத்தில் கேதுவும் இருப்பார்கள். இந்த கிரகங்களின் நிலை மிகவும் அற்புதமானது. இப்படியான கிரகங்களின் நிலையால் ரவி யோகத்தில் வழிபாடு செய்தால், நாம் இதுவரை கண்ட அனைத்து தடைகள் மற்றும் சிரமங்களும் விரைவில் நீங்கலாம்.

ரவி யோகத்தில் வழிபாடு

ரவி யோகத்தில் வழிபாடு

விநாயகர் சதுர்த்தியில் சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரத்துடன் ரவி யோகம் உருவாகிறது. அதனால் தான் இந்த முறை ரவி யோகத்தில் வழிபாடு செய்வது நல்லது. இந்த சுப நேரத்தில் புதிய வேலையைத் தொடங்கி விநாயகரை வழிபடுவது மிகவும் உகந்தது.

விநாயகர் வழிபாட்டிற்கு சாதகமான நேரம்

விநாயகர் வழிபாட்டிற்கு சாதகமான நேரம்

விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட உகந்த நேரம் மதியம். அதுவும் காலை 11.21 மணி முதல் மதியம் 1.33 மணி வரை வழிபடுவது நல்லது. மேலும் சதுர்த்தியானது இரவு 9.57 வரை இருப்பதால், நாள் முழுவதும் வழிபாடு நடத்தலாம்.

சந்திரனைப் பார்க்கக்கூடாது

சந்திரனைப் பார்க்கக்கூடாது

விநாயகர் சதுர்த்தி நாளில் சந்திரனைப் பார்க்கக்கூடாது. இந்த நாளில் சந்திரனைப் பார்ப்பது வாழ்வில் இன்னல்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. மேலும் விநாயகரை வணங்கும் போது துளசி இலைகளை வழங்க வேண்டாம். புராணத்தின் படி, துளசி ஒருமுறை விநாயகரை கஜமுகன் மற்றும் லம்போதரன் என்று அழைப்பதன் மூலம் திருமணத்தை முன்மொழிந்தார். கணேசன் கோபமடைந்து துளசியை சபித்தார். அதன் பிறகு துளசி இலைகள் அவரது வழிபாட்டிற்கு வழங்கப்படுவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Special Combination Of Six Planets Is Being Made On Ganesh Chaturthi

Special Combination 6 eclipses is being made on Ganesh Chaturthi. With this auspicious combination of planets, Bappa will remove all the troubles. Read on to know more.
Desktop Bottom Promotion