Latest Updates
-
இந்த 4 ராசி குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக பெரிய சாதனையாளர்களாக வருவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை சால்னாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
மின்விசிறிகளில் ஏன் எப்போதும் மூன்று இறக்கைகள் மட்டுமே உள்ளது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
ஜூலை 16-ல் நிகழும் சூரியன்-சந்திரன் அரிய சேர்க்க: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்க போகுதாம் - உங்க ராசி என்ன? -
இந்த அறிகுறிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்க பணக்கஷ்டத்தில் சிக்க போறீங்களாம் - சாணக்கிய தந்திரம் -
சேமியா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்..
இந்த 7 பூக்கள்னா விநாயகருக்கு ரொம்ப பிடிக்குமாம்... இதில் ஒன்றை வைச்சு இன்னைக்கு பிள்ளையாரை கும்பிடுங்க...!
Ganesh Chaturthi 2023 in Tamil: கடவுளுக்கான எந்தவொரு பூஜையும், சடங்குகளும் பூக்கள் இல்லாமல் முழுமையடையாது. பூக்களைப் பயன்படுத்தி கடவுள் மீதான உங்களின் பக்தியையும், அன்பையும் காட்டலாம். பூக்களின் நறுமணம் வழிபாட்டு இடத்திற்கு நேர்மறை மற்றும் அழகியல் அதிர்வை அளிக்கிறது.
மேலும் இது நல்ல ஆற்றலை ஈர்க்க உதவுகிறது மற்றும் வழிபாட்டிற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. விநாயக சதுர்த்தி நெருங்கி வருவதால், விநாயகப் பெருமானுக்கு இந்த அழகான பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால், பூஜையில் நீங்கள் பயன்படுத்துவது உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும்.

விநாயகர் சதுர்த்தி பூஜையில் நீங்கள் கடவுளுக்கு படைக்க வேண்டிய அழகான பூக்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
செம்பருத்தி
செம்பருத்தி ஒரு அழகான சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற மலர் ஆகும், இது இந்திய வீடுகளில் எளிதாகக் காணப்படுகிறது. விநாயகப் பெருமானை மகிழ்விக்கவும், எதிரிகள் இல்லாமல் வாழவும் மற்றும் வளர்ச்சிக்காகவும் பக்தர்கள் இந்தப் பூவை விநாயகருக்கு காணிக்கையாகச் செலுத்தி வழிபட வேண்டும்.
சாமந்தி
விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான மலர்களில் ஒன்றாக சாமந்திப்பூ இருக்கிறது. இந்த அற்புதமான மலர் நேர்மறை உணர்ச்சிகளையும் ஆற்றலையும் பிரதிபலிக்கிறது. இந்த ஆரஞ்சு நிற பூவை விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு அவசியம் அர்ப்பணிக்க வேண்டும், ஏனெனில் இது அனைத்து நாள்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.
முல்லை
விநாயக சதுர்த்திக்கு வழங்கப்படும் பூக்களில் நித்திய முல்லையும் ஒன்று. நித்ய முல்லை என்று அழைக்கப்படும் இது ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன. இது குடும்ப ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இதற்கு மற்றொரு பெயர் நட்சத்திர மல்லி ஆகும். மேலும் இதனால் நீண்ட நாள் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
சங்குப்பூ
விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான மலர்களில் ஒன்று நீல நிற சங்குப்பூ. இது அழகுக்கு ஒரு வரையறையாகும். விரைவில் திருமணம் நடக்க விரும்புபவர்கள் இந்த மலரை வைத்து விநாயகரை வழிபட வேண்டும்.
செவ்வந்தி
மோசமா கண் திருஷ்டியிலிருந்து விடுபட விநாயக சதுர்த்தி அன்று, இந்த மலரை வைத்து விநாயகரை வழிபட வேண்டும். இந்த சிறிய மஞ்சள் பூக்கள் தீய கண்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க வழங்கப்படுகின்றன.
பாரிஜாதம்
இது ஒரு அழகான மற்றும் அரிதான தாவரமாகும், இந்த பூக்கள் மலர்ந்தவுடனேயே தரையில் விழும். ஹர்சிங்கர் என்றும் அழைக்கப்படும் பாரிஜாதம் அனைத்து தெய்வங்களுக்கும் ஏற்ற மலராகும். பாரிஜாதம் என்ற வார்த்தையின் அர்த்தம் "பரவியது" அல்லது "பரலோகம்". பூக்கள் இரவில் பூத்து, காலை வெளிச்சத்தில் மரங்களில் இருந்து உதிர்ந்து விடும்.
அரளி
அரளி செடியின் விதை மற்றும் பிற பகுதிகள் விஷம் என்று கருதப்பட்டாலும் அதன் மலர்கள் தெய்வங்களுக்கு மிகவும் பிடித்தவை, குறிப்பாக விநாயகருக்கு சிவப்பு அரளி மிகவும் பிடித்ததாகும். விரும்பியவர்களை திருமணம் செய்ய இந்த மலரை வைத்து விநாயகரை வழிபட வேண்டும்.



Click it and Unblock the Notifications
