Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்.. -
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம்
சேமியா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Semiya Upma With Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் காலையில் ஒரே மாதிரி இட்லி, தோசை, சப்பாத்தி செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் சேமியா பாக்கெட் உள்ளதா? அப்படியானால் அந்த சேமியாவைக் கொண்டு பெங்களூரு டிபன் கடை ஸ்டைல் சேமியா உப்புமாவையும், அதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னியையும் செய்யுங்கள். இந்த காம்போ அருமையாக இருக்கும். ஒருமுறை இந்த காம்போவை ட்ரை செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பெங்களூரு டிபன் கடை ஸ்டைல் சேமியா உப்புமா மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்களூரு டிபன் கடை ஸ்டைல் சேமியா உப்புமா மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 லிட்டர்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வறுத்த அரிசி சேமியா - 1 பாக்கெட்
சேமியா உப்புமாவிற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வறுக்காத வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - தேவையான அளவு
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த சேமியா
* சிறிய எலுமிச்சை - 1
* வறுத்த முந்திரி, வேர்க்கடலை
* நெய் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தேங்காய் சட்னிக்கு...
* சிறிய மூடி தேங்காய் - 1
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் நீரை ஊற்றி, அத்துடன் உப்பு
மற்றும் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் 1 பாக்கெட் வறுத்த அரிசி சேமியாவை சேர்த்து,
மிதமான தீயில் வைத்து, 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை
வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வறுக்காத வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் முந்திரியை சேர்த்து லேசாக நிறம் மாற வறுத்து, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த சேமியா, சிறிய எலுமிச்சையின் சாறு, வறுத்த
முந்திரி, வேர்க்கடலை, நெய், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு
அனைத்து பொருட்களும் ஒன்று சேருமாறு கிளறி விட்டு இறக்கினால், சுவையான
பெங்களூரு டிபன் கடை ஸ்டைல் சேமியா உப்புமா தயார்.
* பின்னர் இதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
அதற்கு மிக்சர் ஜாரில் சிறிய மூடி தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை
மிளகாய், இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications