Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
4 முட்டை இருந்தா இந்த முட்டை சால்னாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு டக்கரா இருக்கும்
Muttai Salna Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்யப் போகிறீர்களா? அதற்கு வழக்கமான உருளைக்கிழங்கு குருமா செய்து போரடித்து விட்டதா? புதிதாக அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் ஒருமுறை சுவையான முட்டை சால்னாவை செய்யுங்கள்.

இந்த முட்டை சால்னா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, பரோட்டா போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சால்னா செய்வது மிகவும் எளிதானது. எனவே புதிதாக சமைக்க முயற்சிப்பவர்களும் இந்த சால்னாவை ஈசியாக செய்யலாம். இந்த முட்டை சால்னா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.
உங்களுக்கு இந்த சுவையான முட்டை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா தயாரிக்க:
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் சோம்பு
- ½ ஸ்பூன் மல்லி விதை
- 10 பூண்டுப் பல்
- 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
- கால் கப் நறுக்கிய தேங்காய்
- ½ ஸ்பூன் கசகசா
- 2 பச்சை மிளகாய்
முட்டை சால்னா செய்ய:
- 4 வேகவைத்த முட்டைகள்
- ½ கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய புதினா
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 1 இன்ச் பட்டை
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- முதலில் முட்டையை வேகவைத்து தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் சோம்பு, மல்லி விதைகள், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பூண்டுப் பற்களைச் சேர்த்துச் சில நொடிகள் வதக்கவும்.
- அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- கடாயை மூடி வைத்து, மிதமான தீயில் சில நிமிடம் வேகவிடவும். வெங்காயம் மற்றும் தக்காளி மென்மையாகும் வரை சமைத்து, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அதனுடன் பொட்டுக்கடலை, கசகசா மற்றும் நறுக்கிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இந்த கலவை நன்கு ஆறிய பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
- அதே கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். சில நொடிகள் வதக்கிய பிறகு, கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தயார் செய்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்க்கவும். தேவைக்கேற்ப 1 முதல் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். குறைந்த தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- அதன்பின் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் ஆகிய மசாலாப் பொடிகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
இந்த சால்னாவை சுமார் 10-12 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக இருந்தால், தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
எண்ணெய் மேலே மிதந்து வரும்போது, வேகவைத்து நறுக்கி வைத்துள்ள முட்டைத் துண்டுகளைச் சேர்க்கவும்.
- குறைந்த தீயில் 2-3 நிமிடங்கள் வேகவைத்து, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இதை சூடான இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications