Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Yakhni Pulao Recipe in Tamil: காலை அல்லது மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் அட்டகாசமான சுவையில் ஒரு உணவை சமைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், கொஞ்சம் காய்கறியும்உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் யக்னி புலாவை செய்து பாருங்கள்.

இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் குழந்தைகள் காய்கறி சாப்பிடாதவர்கள் என்றால் இந்த ஸ்டைலில் செய்யும் போது அவர்கள் கூட காய்கறிகளை சாப்பிடுவார்கள். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஷ்மீர் யக்னி புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 2 ஸ்பூன் முந்திரி
- 2 ஸ்பூன் பாதாம்
- 2 ஸ்பூன் உலர் திராட்சை
- 2 பிரியாணி இலை
- 1 இன்ச் பட்டை
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சோம்பு
- ½ ஜாதிபத்ரி
- ½ ஸ்பூன் கிராம்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 1 இன்ச் இஞ்சி, துருவியது
- 5 பூண்டு பற்கள், பொடியாக நறுக்கியது
- 6 பச்சை மிளகாய், கீறியது
- 5 பீன்ஸ், நறுக்கியது
- 1 கேரட், நறுக்கியது
- 3 ஸ்பூன் பட்டாணி
- 1 உருளைக்கிழங்கு, சதுரமாக வெட்டியது
- ½ ஸ்பூன் சீரகப் பொடி
- ½ ஸ்பூன் மல்லித் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- ½ கப் தயிர்
- 3 கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் உப்பு
- 1½ கப் ஊறவைத்த பாஸ்மதி அரிசி
- 3 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் 2 ஸ்பூன் முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பருப்பு வகைகள் பொன்னிறமாகும் வரை வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
- பின்னர் 1 பெரிய வெங்காயம், 1 இன்ச் இஞ்சி, 5 பல் பூண்டு மற்றும் 6 மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, ½ ஸ்பூன் சீரகத்தூள், ½ ஸ்பூன் மல்லித்தூள் மற்றும் ½ ஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மசாலாப் பொருட்களின் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- இப்போது ½ கப் தயிர் சேர்த்து, ஓரங்களில் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
- 3 கப் நீர் மற்றும் 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- தண்ணீர் கொதித்ததும் அதனுடன் 1½ கப் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
- மூடி வைத்து, அரிசி மென்மையாகவும் நன்றாகவும் வேகும் வரை 20 நிமிடங்களுக்குக் குறைந்த தீயில் சமைக்கவும்.
- அரிசி நன்கு வதந்ததும் 3 ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் வறுத்த பருப்பு வகைகளைச் சேர்த்து, அரிசி உடையாதவாறு மெதுவாகக் கிளறவும்.
- கடைசியாக, தயிர் பச்சடியுடன் யக்னி புலாவை ரசித்து சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications
