Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ஆண்டு சதுர்த்தி திதியானது ரவி யோகத்தில் வருகிறது. இந்த யோகம் ஒரு சுப யோகம். எனவே 2022 விநாயகர் சதுர்த்தியில் 3 ராசிக்காரர்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்கப் போ

வேத ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தியானது ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் விநாயகர் பிறந்தார் என்பது ஐதீகம். அதே வேளையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தான் சுக்கிரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். அதோடு இந்நாளில் சதுர்த்தி திதியானது ரவி யோகத்தில் வருகிறது. இந்த யோகம் ஒரு சுப யோகம். இந்த யோகமானது எதிர்மறை ஆற்றல்களால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கும். எனவே 2022 விநாயகர் சதுர்த்தியில் 3 ராசிக்காரர்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் வாருங்கள்.

கடகம்
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரின் அருள் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். இதனால் பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பணம் சம்பாதிப்பார்கள். வழிக்கறிஞர்கள், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் விநாயகரின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிகம் விரிவடையும். புதிய வணிக உறவுகள் கிடைக்கும். பணிபுரிபவர்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இது பணியிடத்தில் பாராட்டைப் பெற்றுத் தரும். குழந்தைகளால் சில நற்செய்திகள் கிடைக்கும். முக்கியமாக பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயகரின் அருளால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வருமான உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. நிறைய வருமானத்திற்கு புதிய ஆதாரங்கள் கிடைக்கும். ஊடகம், திரைப்படம், இசை துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும். அனைத்து வேலைகளையும் தடையின்றி எளிதாக முடிக்க முடியும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications