Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல விநாயகரின் கோபத்துக்கு ஆளாவீங்க...
Ganesh Chaturthi 2023: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரவுள்ளது. இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று தான் விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தியானது விநாயகர் பிறந்த நாளாகும்.
விநாயகர் அவதரித்த இந்த தினமானது 10 நாட்கள் இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் விநாயகரின் சிலைகளை வாங்கி வந்து, வீட்டில் வைத்து, விநாயகரை அழகாக அவருக்கு பிடித்த பொருட்களால் அலரிப்பார்கள். அதோடு விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவார்கள்.

விநாயகரின் அருளைப் பெற நினைப்பவர்கள், இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் அவரை மகிழ்விக்கும் பொருட்களை படைத்து வழிபடுவார்கள். இதனால் விநாயகரின் அருள் கிடைத்து, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆனால் விநாயகர் சதுர்த்தி நாளில் சிறு தவறுகளை செய்தாலும், அதுவும் விநாயகருக்கு பிடிக்காததை படைத்து வழிபட்டால், அது விநாயகரின் கோபத்திற்கு ஆளாக்கி, பெரிய இழப்பை சந்திக்க வைக்கும் என்பது தெரியுமா? கீழே விநாயகருக்கு எவற்றை படைக்கக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
உடைந்த அரிசி
விநாயகரை வழிபடும் போது அக்ஷதை, அதாவது அரிசி பிரசாதமாக வழங்கப்படுகிறது. அப்படி அரிசியை வைத்து வழிபடும் போது உடைத்த அரிசியை வைத்து வழிபடாதீர்கள். மேலும் விநாயகருக்கு அரிசியைப் படைக்கும் போது, அதில் சிறிது நீரைத் தெளித்து ஈரமாகவே படையுங்கள். உடைந்த அரிசியை விநாயகருக்கு படைத்தால், அதனால் விநாயகரின் கோபத்திற்கு ஆளாகி, வறுமை வாட்டி எடுத்துவிடும்.
துளசி
விநாயகரின் வழிபாட்டில் துளசி இலைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். புராணங்களின் படி, துளசியை மணக்க விநாயகர் மறுத்தார். துளசியின் விருப்பத்தை விநாயகர் மறுத்ததால், துளசி கோபமடைந்து விநாயகருக்கு ஒன்றல்ல இரண்டு திருமணங்கள் நடக்கட்டும் என சபித்தார். அப்போது விநாயகரும், துளசியை நீ அசுரனை மணந்து கொள்வாய் என சபித்தார். இதனால் விநாயகர் வழிபாட்டில் துளசி இடம் பெறுவதில்லை. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், விநாயகரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
வெள்ளை நிற பொருட்கள்
விநாயகருக்கு வெள்ளை நிற ஆடைகள், வெள்ளை நிற பூநூல், வெள்ளை சந்தனம் போன்றவற்றை படைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். புராணங்களின் படி, ஒருமுறை சந்திரன் விநாயகரின் உருவத்தை கேலி செய்து, விநாயகரின் கோபத்திற்கு ஆளாகி சாபத்தைப் பெற்றார். அதனால் சந்திரனுக்குரிய வெள்ளை நிற பொருட்கள் எதுவும் விநாயகரின் பூஜையில் இடம் பெறுவதில்லை.
தாழம் பூ
விநாயகரை வழிபடும் போது, அவரை மகிழ்விக்க பல பொருட்களை நீங்கள் படைக்கலாம். ஆனால் வெள்ளை நிற பூக்களுடன், தாழம்பூவையும் விநாயகருக்கு படைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புராணங்களின் படி, ஒருமுறை தாழம்பூ சிவபெருமானின் சாபத்திற்கு ஆளானதோடு, சிவனின் பூஜையில் இடம்பெறக்கூடாது என்று சபித்தார். தந்தையின் பூஜையில் இடம் பெறாத எந்த பூவும் தனது பூஜையிலும் இடம் பெறக்கூடாதென விநாயகர் கூறினார். எனவே இந்த பூவையும் விநாயகருக்கு படைப்பதை தவிர்த்திடுங்கள்.
காய்ந்த மலர்கள்
எப்போதுமே காய்ந்த அல்லது வாடிய பூக்களை விநாயகரின் பூஜையில் பயன்படுத்தக்கூடாது. காய்ந்த பூக்களானது மங்களகரமற்றதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட காய்ந்த பூக்களை பயன்படுத்தும் போது, அது வீட்டில் வறுமையைக் கொண்டு வருவதோடு, வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளையும் வரவழைக்கும். எனவே எப்போதும் நற்பதமான மலர்களையே விநாயகருக்கு பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











