Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்..
Ganesh Chaturthi 2022: விநாயகர் சிலையை எந்த நேரத்தில் வீட்டிற்கு கொண்டு வருவது நல்லது தெரியுமா?
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதன்மை கடவுளான விநாயகரின் அருள் இருந்தால், வாழ்வில் உள்ள தடைகள் விலகி, வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
இந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகர் பிறந்த தினம் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இது 10 நாட்கள் ஆடம்பரமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படும் திருவிழா. இந்த நாட்களில் விநாயகப் பெருமான் பூமியில் அருள்பாலித்து, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், ஞானத்தையும், செழிப்பையும் தருகிறார் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதன்மை கடவுளான விநாயகரின் அருள் இருந்தால், வாழ்வில் உள்ள தடைகள் விலகி, வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வர சிறந்த நேரம்
விநாயகர் சதுர்த்தியானது மங்களகரமான பத்ர யோகம், ஹம்ச யோகம் மற்றும் சச யோகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சூரியனின் செல்வாக்கின் கீழ் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று புதன், குரு, சனி மற்றும் சூரியன் ஆகிய 4 முக்கிய கிரகங்களும் சொந்த ராசியில் இருப்பதால், இந்த விநாயகர் சதுர்த்தி இன்னும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. இந்நாளில் பத்ர யோகம் மாலை 3.22 மணிக்கு முடிகிறது. பத்ர யோகம் முடிந்த பின்னர் விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வருவதே நல்லது.

பூஜைக்கான சிறந்த நேரம்
2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட சிறந்த நேரம் காலை 11.05 மணி முதல் மதியம் 01.38 மணி வரை ஆகும். இந்நாளில் ரவி யோகம் உருவாவதால், இந்நாளில் சுப காரியங்களை மேற்கொள்வது நல்லது. அதுவும் நல்ல காரியங்களை தொடங்க சிறந்த நேரம் அதிகாலை 05.58 மணி முதல் 12.28 மணி வரை ஆகும்.

கணபதி ஸ்தாபனாவுக்கு முன் மனதில் கொள்ள வேண்டியவைகள்
* விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வரும் முன், வீட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
* ஒரு கலசத்தில் நீரை நிரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து வெற்றிலையால் அலங்கரிக்க வேண்டும்.
* விநாயகர் சிலையை வைக்கும் பலகையை சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும்.
* விநாயகர் சிலையின் இடது தோளில் பூநூலை அணிவிக்க வேண்டும்.
* விநாயகர் சிலைக்கு சந்தன திலகம் இட்டு, எருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மற்றும் சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
* பின் நெய் தீபம் ஏற்றி, மந்திரங்களை சொல்லி, விநாயகருக்கு பிடித்த மோதகம், கொழுக்கட்டை, லட்டு ஆகியவற்றை படைக்க வேண்டும்.

விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் செய்ய வேண்டியவை
* பக்தர்கள் 1 1/2 நாட்கள், 3 நாட்கள், 7 நாட்கள் அல்லது 10 நாட்களுக்கு வீட்டில் விநாயகரை வைத்திருக்கலாம்.
* விநாயகர் உங்கள் வீட்டில் விருந்தாளியாக இருப்பதால், முதலில் அவரை வீட்டிற்கு கொண்டு வந்ததும், தண்ணீர், உணவு அல்லது பிரசாதத்தை வழங்க வேண்டும்.
* 'சாத்விக்' உணவு தயாரித்து, அதை உண்ணும் முன் விநாயகர் சிலைக்கு வழங்க வேண்டும்.
* வீட்டில் உள்ள விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* உங்கள் வீட்டிற்கு அருகே நீர்நிலை இல்லாவிட்டால், வீட்டில் உள்ள விநாயகர் சிலையை ஒரு வாளி நீரில் மூழ்கடித்து விடுங்கள்.

விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் செய்யக்கூடாதவை
* வீட்டில் விநாயகர் சிலையை வாங்கி வைத்த பின், பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* விநாயகர் சிலையை வீட்டில் வைத்த பின்னர், அவரை கவனிக்காமல் இருக்கக்கூடாது. முக்கியமாக வீட்டை பூட்டிவிட்டு எங்கும் செல்லக்கூடாது.
* விநாயகரை நீரில் கரைக்கும் முன், அவருக்கு ஆரத்தி, பூஜை மற்றும் பிரசாதம் வழங்க தவறக்கூடாது.
* வீட்டில் விநாயரை வைத்தால், சுப முகூர்த்தத்தில் பூஜையை செய்ய வேண்டும்.
* வீட்டில் விநாயகர் சிலை இருக்கும் வரை இறைச்சி மற்றும் மதுவைத் தவிர்க்க வேண்டும்.

விநாயகர் சிலையை கரைக்கும் நாள்
ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சிலையை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்த பின்னர், செப்டம்பர் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி நாளில் விநாயகரின் சிலையை கரைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications