இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்..

Jupiter Rise In Cancer On 12 August 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இதுவரை அஸ்தமன நிலையில் பயணித்து வந்தார். இந்நிலையில் குரு பகவான் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உதயமாகிறார்.

Jupiter Rise In Cancer On 12 August 2026 These 6 Zodiac Signs Face Financial Loss

பொதுவாக குரு பகவான் உதயமாவது மங்களகரமானதாக கருதப்பட்டாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் மிகவும் சிறப்பாக இருப்பதில்லை. குரு பகவானின் நிலையைப் பொறுத்து, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியிருக்கும். இப்போது குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

குரு பகவான் மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவும் குடும்பம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அவசரமாக எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்

குரு பகவான் மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். நிதி நன்மைகள் கிடைக்கும் அதே வேளையில் தேவையில்லாத செலவுகளும் அதிகரிக்கும். அவசரப்பட்டு எதிலும் பெரிய அளவில் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் பேச்சு மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பிரச்சனைகளை அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிதி ஒழுக்கம் மிகவும் அவசியம். செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும், தேவையில்லாத செலவுகளை அறவே தவிர்க்க வேண்டும். தேவையற்ற கடன்கள் அல்லது அபாயகரமான முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். இதனால் வேலைப்பளு அதிகரிக்கும். தேவையில்லாத எந்த ஒரு விஷயங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று முதல் தொழிலில் அவசரமாக எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேண முயற்சிக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சரியான நிதி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். பரம்பரை சொத்து விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சொத்துக்களை இழக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் தேவையற்ற நிதி அபாயங்களைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களை குரு பகவான் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகளும், போட்டியும் அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடினமாக உழைத்தால் வெற்றி கனியை சுவைக்கலாம். ஆனால் உடன் வேலை செய்வோருடன் எவ்விதமான கருத்து வேறுபாடுகளையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஒழுக்கமான வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, August 12, 2026, 11:00 [IST]
Desktop Bottom Promotion