Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த சில விநாயகர் ஸ்லோகங்கள்!
Ganesh Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகர் ஸ்லோகங்கள் சொல்வது எப்பொழுதுமே சிறந்த ஒன்று. இந்துக் கடவுளான விநாயகர் எப்பொழுதுமே தடைகளை நீக்கி நல்வாழ்வை தரக் கூடியவர். விநாயகரின் ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரிக்கும் ஆழமான அர்த்தங்கள் உள்ளன.
விநாயகரின் ஸ்லோகத்தில் அவரின் தெய்வீகத் தன்மை, அவரின் தோற்றம் மற்றும் கருணை போன்ற விஷயங்கள் குறிப்பிடப்படுகிறது. விநாயகப் பெருமான் சிவன் மற்றும் பார்வதி தேவியின் புதல்வன் ஆவார். யானை முகம் மற்றும் வலிமையான உடலைக் கொண்டவர். கணங்களுக்கு அதிபதியான இவர் தடைகளை நீக்குபவர் எனப் பட்டம் பெற்றதால் விக்னேஷ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

அதுமட்டுமல்லாமல் எந்தவொரு வேலையும் அல்லது பூஜையைத் தொடங்குவதற்கு முன்பு பக்தர்கள் தடைகளை நீக்க விநாயகரை வழிபட்டு ஆரம்பிப்பார்கள். அந்த வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட மிகவும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் மற்றும் அதன் அர்த்தங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
சக்தி வாய்ந்த விநாயகர் ஸ்லோகங்கள்:
ஸ்லோகம் 1:
சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
அர்த்தம் :
விநாயகப் பெருமானே உன்னை நான் மனதார வணங்குகிறேன். அழகிய வெண்ணிற ஆடைகளை அணிந்தவனும், எங்கும் வியாபித்திருப்பவனும், சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவனும், நான்கு கரங்களை உடையவனும்., இனிமையான முகத்தை உடையவரே, இந்த இனிய வடிவத்தை நான் தியானிக்கிறேன். உன் அருளால் என் பாதைகளில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி எனக்கு அருள் புரிவாய்.
ஸ்லோகம் 2:
விநாயக விக்னராஜா ஸ்லோகம் :
விநாயகோ விக்னராஜ த்வைமதுர கணாதிபஹ
அப்யேக-தனத ஹேரம்ப லம்போதர கஜானா
அர்த்தம் :
விநாயக என்னும் பெயருக்கு எல்லா உயிர்களுக்கும் அதிபதி என்று பொருள். விக்னராஜா என்பதற்கு தடைகளை நீக்குபவன் என்று பொருள். கணாதிப என்பதற்கு கணங்களின் தளபதி என்று பொருள், ஏகதந்தா என்பதற்கு ஒரே ஒரு தந்தம் கொண்ட விநாயகப் பெருமான் என்று பொருள். ஹேரம்பா என்பதற்கு தவிர்க்க முடியாத சக்திகளைக் கொண்டவன் என்று பொருள். கஜானா என்றால் யானை முகத்தை உடையவன் என்று பொருள். இப்படி ஏராளமான பெயரைக் கொண்ட உன்னை நான் வணங்குகிறேன்.
ஸ்லோகம் 3 :
வக்ரதுண்ட மஹாகாய விநாயகர் ஸ்லோகம் :
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரபா நிர்விக்னம்
குருமே தேவ ஸர்வ காரியேஷு ஸர்வதா
அர்த்தம் :
வளைந்த தும்பிக்கையையும், அற்புதமான உடலையும் கொண்ட என் இறைவனே. உன் முகம் கோடிக்கணக்கான சூரியன்களின் பிரகாசம் கொண்டது. நான் உன்னை வணங்குகிறேன். எனது எல்லா வேலைகளும் எந்த வித இடையூறும் இல்லாமல், எப்போதும் நிறைவேற நீ உடன் இருப்பாய்.
ஸ்லோகம் 4 :
கௌரி நந்தன கஜானன
கிரிஜா நந்தன நிரஞ்சனா
பார்வதி நந்தன ஷுபாநன
பாஹி ப்ரபோ மாம் பாஹி ப்ரசன்னா
அர்த்தம் :
கெளரி தேவியாகிய பார்வதி தேவியின் அன்பு மகனே, யானை முகத்தை உடைய பிள்ளையே, கிரிஜா தேவியின் புதல்வனே, பார்வதி தேவியின் மகனாகிய நீ மங்களகரமான முகத்தை உடையவன். உனது அருளால் எப்பொழுதும் பக்தர்களை ஆசிர்வதிக்க வேண்டும்.
ஸ்லோகம் 5:
ஓம் ஏகாதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி பிரச்சோதயாத்
அர்த்தம் :
ஒற்றைத் தந்த யானைப் பல்லுடன் எங்கும் இருப்பவனே, வளைந்த, யானை வடிவிலான தும்பிக்கையுடன் அதிக புத்திசாலித்தனத்தை கொண்ட விநாயகப் பெருமானே உன்னை தியானித்து பிரார்த்தனை செய்கிறோம். ஒற்றைத் தந்தம் கொண்ட யானைப் பல்லைக் கொண்டவன் முன் தலை வணங்குகிறோம்.
ஸ்லோகம் 6:
எளிய கணபதி மந்திரம் :
"ஓம் கம் கணபதயே நம"
அர்த்தம் :
சர்வ வல்லமையுள்ள கணபதியை நான் வணங்குகிறேன். அவருடைய அனைத்து சிறந்த குணங்களையும் நான் அறிகிறேன். எந்த ஒரு வேலையைத் தொடங்கும் முன் ஒருவரது வாழ்வில் இருந்து வரும் எல்லா எதிர்மறைகளையும் இது விலக்குகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஒருவர் மேற்கொள்ள விரும்பும் அனைத்து புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
ஸ்லோகம் 7:
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித ஜம்பூபலா சார பக்ஷிதம்
உமாஸுதம் ஶோக விநாஷ காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்
அர்த்தம் :
யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், பார்வதி தேவியின் புத்திரனுமான விநாயகப் பெருமானை நான் வணங்குகிறேன் , எனக்கு வரும் துன்பத்தை அழிக்கக் காரணமான விக்னேஸ்வரரின் காலடித் தாமரையை நான் என்றும் பணிகிறேன்.
கணபதி மந்திரம் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள்:
* லட்சுமி தேவி விநாயகரின் இன்னொரு தாய் போன்றவள். எனவே நீங்கள் விநாயகரை வழிபடும் போது லட்சுமி தேவியின் அருளும் உங்கள் வீட்டிற்கு கிடைக்கும். பணம், செல்வம், வெற்றி என அனைத்தும் கிட்டும்.
* இன்னொரு தாயான சரஸ்வதி தேவியின் அருளும் கல்வி, அறிவு மற்றும் புலமையையும் நீங்கள் பெறுவீர்கள்.
* நீங்கள் செய்யக்கூடிய காரியம் தடையின்றி நடக்க கணபதி மந்திரம் உதவுகிறது.
* கணபதி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பக்தரின் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு எதிரியும் அகற்றப்பட்டு, பயம் நீங்கும்.
* கணபதி மந்திரம் ஒருவரின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் வாழ்க்கையில் சிறந்த நபராக மாறவும் வெற்றி வாய்ப்பை பெறவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications











